ஜூலை மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்

July Rasipalan 2022: ஜூலை மாதத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை பல ராசிகளுக்கு நன்மை பயக்கும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 30, 2022, 11:56 AM IST
  • இந்த ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் பொற்காலம்
  • ஜூலையில் ஐந்து பெரிய கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்படும்
  • ஜூலை மாதம் இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்
ஜூலை மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் title=

ஜூலை மாத கிரக மாற்ற ராசிபலன் 2022: ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராசியை மாற்றுகிறது. ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி வரும் ஜூலை மாதம் பற்றி பேசுகையில், ஜூலை 2 ஆம் தேதி, புதன் கிரகம் மிதுன ராசிக்குள் நுழைகிறது. இதையடுத்து சூர்ய பகவான் ஜூலை 16-ம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். மேலும் செவ்வாய் மற்றும் சுக்கிரனும் கிரகம் ஜூலை மாதத்தில் தனது ராசியை மாறுகின்றனர். எனவே தற்போது எந்த ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் கிரகங்களின் நிலைப்படி பண பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் பொற்காலம்

மிதுனம்- மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் தொழிலில் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். திடீர் பண ஆதாயங்கள் ஏற்படும். நீங்கள் சில பெரிய பொறுப்புகளை பெறலாம்.

மேலும் படிக்க | குருவின் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி பொங்கும்

சிம்மம்- ஜூலை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்கள் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். புதிய பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். உத்தியோகத்தில் புதிய சலுகைகளைப் பெறுவீர்கள். வேலையில் அதிகரிப்பு ஏற்படும்.

தனுசு- தனுசு ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் நிதிப் பலன்களைப் பெறலாம். இந்த நேரத்தில், நீங்கள் திடீரென்று பண ஆதாயங்களின் தொகையைப் பெறுவீர்கள். வருமானம் பெருகும், பணம் சம்பாதிக்கும் வழிகள் திறக்கப்படும். முதலீடு செய்வதற்கு இதுவே ஏற்ற காலம். சொத்து தகராறில் உங்களுக்கு சாதகமாக முடிவு கிடைக்கும்.

ஜூலை மாதம் இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்

ஜூலை மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் நிலை சாதகமாக இல்லை. எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். கொடிய நோய்கள் உங்களை தாக்கலாம். பொறுமையை கடைபிடிப்பது நல்ல பலனை பெற்று தரும். வாக்குவாதங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது.

ஜூலையில் ஐந்து பெரிய கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்படும்

புதன் ராசி மாற்றம் 2022 ஜூலை: ஜூலை 2ம் தேதி காலை 09:42 மணிக்கு புதன் ரிஷபம் ராசியிலிருந்து விலகி மிதுன ராசிக்குள் நுழைகிறார். இதன் பிறகு ஜூலை 16-ம் தேதி கடக ராசியிலும், ஜூலை 31-ம் தேதி சிம்ம ராசியிலும் புதன் நுழைகிறார்.

மகர ராசிக்குள் சனி வக்ர பெயர்ச்சி: சனி ஜூலை 12 ஆம் தேதி மதியம் 02:58 மணிக்கு சனி மகர ராசியில் நுழைகிறார். சனி தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து அதன் பிறகு மகர ராசியில் நுழைகிறார். 

சுக்கிரன் ராசி மாற்றம்: ஜூலை 13ம் தேதி காலை 10.50 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து சுக்கிரன் புறப்பட்டு மிதுன ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியில் சூரியனும், புதனும் அமர்வதால் திரிகிரகம் யோகம் உருவாகும். 

சூரிய ராசி மாற்றம் 2022: கிரகங்களின் அரசனான சூரியன் ஜூலை 16ஆம் தேதி இரவு 10:56 மணிக்கு கடக ராசிக்குள் நுழைகிறார். 

குரு வக்ர பெயர்ச்சி 2022: குரு பகவான் வியாழன் ஜூலை 28 ஆம் தேதி மதியம் 02:09 மணிக்கு மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவார். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News