கனவில் பாம்பு வந்தால் நல்லதா? கெட்டாத? உடனே இதை பண்ணிடுங்க!

சில நாடுகளில் பாம்புகளை உணவாக உட்கொண்டாலும், இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பாம்புக்களை பலரும் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.   

Written by - RK Spark | Last Updated : Mar 5, 2023, 10:48 AM IST
  • கனவில் வரும் பாம்பு ஆபத்து அல்லது எதிர்மறையின் அடையாளமாகக் காணப்படுகிறது.
  • கால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கும் கனவில் பாம்பு அடிக்கடி வரும்.
  • ராகு மற்றும் கேது ஒன்றாக வரும்போது ஒருவருக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
கனவில் பாம்பு வந்தால் நல்லதா? கெட்டாத? உடனே இதை பண்ணிடுங்க! title=

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி, கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பை பார்த்தாலே பலருக்கும் பயம் வரும்.  உயிரோடு இருக்கும் பாம்பை பார்த்தால் மட்டுமல்ல, செத்துப்போன பாம்பை பார்த்தால் கூட சிலருக்கு பயம் வரும்.  பாம்புகளில் பல வகைகள் உள்ளது, சில பாம்புகள் கொடிய விஷத்தன்மையுடன் இருக்கும், சில பாம்புகள் கொஞ்சம் குறைவான விஷத்தன்மையுடன் இருக்கும்.  இருப்பினும் பாம்பின் தோற்றத்தையும், அது சீரும் சத்தத்தையும் கேக்கும்போதே பலருக்கும் உடல் நடுங்கிவிடும்.  சிலரது கனவிலும் பாம்புகள் வந்து பயமுறுத்தும், ஜோதிட சாஸ்திரத்தின்படி கனவில் நாம் காணும் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு பலன்கள் கூறப்படுகிறது.  குறிப்பாக பாம்பை கனவில் பார்த்துவிட்டால், பலரும் அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள்.  சில நாடுகளில் பாம்புகளை உணவாக உட்கொண்டாலும், இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பாம்புக்களை பலரும் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.  இருப்பினும் பாம்பு கனவில் வந்தால் பலருக்குள்ளும் ஒருவித அச்சம் ஏற்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்கவுள்ளதா? முக்கிய அப்டேட் இதோ
   
பொதுவாக கனவில் வரும் பாம்பு ஆபத்து அல்லது எதிர்மறையின் அடையாளமாகக் காணப்படுகிறது. இருப்பினும், உங்கள் கனவில் விஷ்ணுவின் சேஷ் நாக் அல்லது ஆதிசேஷனையும், சிவபெருமானின் வாசுகி பாம்பையும் நீங்கள் கனவில் கண்டால் அது ஆபத்து என்று அர்த்தமல்ல, அது நல்ல விஷயம் தான்.  கனவில் ஒரு பாம்பு அதன் படத்தை நன்கு விரித்து இருப்பது போல் கண்டால், அது எதிர்மறையைக் குறிக்கும்.  இது உங்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக கூட இருக்கலாம், அதோடு இது உங்கள் வாழ்க்கையில் தீங்கினை கூட ஏற்படுத்தலாம் அல்லது யாரோ ஒருவரின் மூலம் உங்களுக்கு தீங்கு ஏற்படலாம்.  இது தவிர பாம்புகள் சவால்கள் மற்றும் கடினமான காலங்களைக் குறிக்கலாம், எனவே கனவில் பாம்பை கண்டால் நீங்கள் முன்பை விட அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அர்த்தம்.

கனவில் பாம்பு அதன் தோலை உதிர்த்தால், உங்கள் வாழ்க்கையை நன்மைக்காக ஒரு மாற்றம் ஏற்படும் என்பதை குறிக்கிறது.  பித்ரு தோஷம் அல்லது இறந்த முன்னோர்களின் சாபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி பாம்புகளைப் பற்றி  கனவு வரும்.  இதுபோன்ற பித்ரு தோஷத்தை போக்கவும், கனவில் பாம்புகளைப் பார்ப்பதை நிறுத்தவும், உங்கள் முன்னோர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.  ஷ்ராத் மற்றும் தர்ப்பணம் போன்ற சடங்குகளைச் செய்து முன்னோர்களின் ஆத்மாவை சாந்திபடுத்தி அவர்களின் ஆசியைப் பெற வேண்டும்.  உங்கள் ஜாதகத்தில் ராகு மற்றும் கேது ஒன்றாக வரும்போது சிலருக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படலாம்.  கால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கும் அடிக்கடி கனவில் பாம்புகள் வரும்.  சிலரின் கர்ம வினை பயங்களாலும் கால சர்ப்ப தோஷ பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | கும்பத்தில் உதயமாகும் சனி! நெருக்கடியில் சிக்கும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News