வக்ர நிவர்த்தி அடைந்த சனியினால் ஜனவரி 17 வரை ‘இந்த’ ராசிகளுக்கு குபேர யோகம்!

சனி பகவான், கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி, மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். ஜனவரி 17 ஆம் தேதி வரை அவர் இந்த நிலையில் நீடிப்பார் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 6, 2022, 05:50 PM IST
  • சனி அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார்.
  • வருமானம் அதிகரிக்கும். நிதி நிலை வலுவடையும்.
  • கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும்.
வக்ர நிவர்த்தி அடைந்த சனியினால் ஜனவரி 17 வரை ‘இந்த’ ராசிகளுக்கு குபேர யோகம்! title=

கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தின் தாக்கத்தை, அனைத்து ராசிகளின் வாழ்விலும் தெளிவாக காணலாம். ஒரு கிரகம், பெயர்ச்சி ஆகும் போது,  சஞ்சரிக்கும் போது, வக்ர பெயர்ச்சி அடையும் போது, சில  ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கிறது. சனிபகவான் அக்டோபர் 23-ம் தேதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ள நிலையில், ஜனவரி 17-ம் தேதி வரை அதில் சஞ்சரிக்க உள்ளார். இதன் போது சனி அவிட்ட நட்சத்திரத்தில் வசிக்கிறார். இந்த நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தை சேர்ந்தது. சனிக்கும் செவ்வாய்க்கும் இடையே பகை உணர்வு இருக்கும் நிலையில், சனி செவ்வாய் கிரகத்தின் சுப யோகமாக மாறப் போகிறார் என்றும், இது சில ராசிகளுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும் என்றும், அவர் குபேர யோகம் பெற்று பொருளாதார ரீதியாக வலுப்பெறுவார்கள் எனவும் ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

சனியால் வரும் தடைகள் நீங்கும். அதே நேரத்தில், கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். சனியின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு விசேஷ பலன்கள் கிடைக்கப் போகிறது. பலன் பெறும் இந்த ராசிக்காரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

மகரம்:

சனி அக்டோபர் 23ம் தேதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். தற்போது இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி நடக்கிறது. ஆனால் சனியின் வக்ர நிவர்த்தியினால் இந்த ராசிக்காரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். தடைபட்ட பணிகள் நிறைவேறும். மேலும் பண ஆதாயமும் உண்டாகும். இந்த நேரத்தில் சனியை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். அதிர்ஷ்டம் குறையாமல் இருக்கும்.

மேலும் படிக்க | நவம்பர் ராசிபலன்: யாருக்கு ‘சூப்பர்’... யாருக்கு ‘சுமார்’; பலன்கள் கூறுவது என்ன!

கும்பம்:

இந்த காலகட்டத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருக்கும். எனினும் சனியின் இந்த வக்ர நிவர்த்தியினால் கும்ப ராசிக்காரர்களின் பிரச்சனைகள் நீங்கும். நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்கள் நன்மை அடைவார்கள். வியாபாரத்திலும் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள், நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

மேலும் படிக்க | துலாமில் இணையும் புதன்-சுக்கிரன்; லக்ஷ்மி நாராயண யோகம் பெறும் '3' ராசிகள்!

துலாம்:

ஜோதிடத்தின்படி, இந்த ராசிக்காரர்களும் சனி திசையினால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சனிபகவானின் வக்ர நிவர்த்தியினால் பெரும் பலன்களைப் பெறுவார்கள். இதுமட்டுமின்றி இவர்களின் வருமானமும் அதிகரிக்கும். நிதி நிலை வலுவடையும். குடும்பத்தின் உதவியால் எந்த ஒரு பெரிய காரியமும் முடியும். எங்கிருந்தோ திடீர் பண ஆதாயங்கள் ஏற்படும். ஆன்மீக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். வாழ்க்கையில் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News