கன்னி ராசியில் வக்ரமடையும் புதன்; இந்த '6' ராசிகளின் தலைவிதி மாறும்!

புதன் வக்ர பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில், புதன் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படும் நிலையில், செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னி ராசியில் புதன் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 3, 2022, 03:32 PM IST
  • நண்பர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • ஆடை போன்ற சில பரிசுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
  • புதிய வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது.
கன்னி ராசியில்  வக்ரமடையும் புதன்;  இந்த '6' ராசிகளின் தலைவிதி மாறும்! title=

புதன் வக்ர பெயர்ச்சி 2022:  ஜோதிடத்தில், புதன் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் புதன் கிரகத்தின் நிலை ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, வணிகம் மற்றும் தொடர்புத் திறன் ஆகியவற்றை பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது.  பஞ்சாங்கத்தின்படி, செப்டம்பர் 10-ம் தேதி கன்னி ராசியில் புதன் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகிறார். இதனால்,  சில ராசிக்காரர்களின் தலை விதி மாறும். புதன் பகவான் பண்ணத்தை வாரி வழங்குவார். 

மேஷம்: கன்னி ராசியில் புதன் சஞ்சரிப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வேலையில் உயர்வு, சம்பளம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். குடும்ப சூழ்நிலை சிறப்பாக இருக்கும். எனினும், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொண்டு  உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.

ரிஷபம்: புதனின் வக்ர பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு சாதகமாக இருக்கும். நேர்மறை ஆற்றல் நிலைத்திருக்கும். வருமானம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிலைத்திருக்கும். நண்பர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ஆடை போன்ற சில  பரிசுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. தாயின் அன்பைப் பெறுவீர்கள். புதிய வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. 

கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு பெயர்ச்சி காலம் சிறப்பாக இருக்கும். வேலைக்கான போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. ஆட்சி அதிகாரம் பலன் தரும். வருமானம் அதிகரிக்கும். அதே சமயம் சில செலவுகளும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!

சிம்மம்: புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும், இதனால், குடும்பத்தினர் மகிழ்ச்சி அடையலாம். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். ஆனால் குடும்ப பொறுப்பு அதிகரிக்கும். மூத்தவர்களிடம் இருந்து பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. எனினும் அதிகமாக உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கப்பட வேண்டும். அதிக வேலை பளு இருக்கும். எனினும் உழைப்பிற்கு ஏற்ற பலன் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மாற்றம் ஏற்படலாம்.

கன்னி: புதனின் வக்ர பெயர்ச்சியினால்,  கன்னி ராசிக்கார்கள் சிறந்த பலனை பெறுவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கௌரவம் உயரும். எனினும், கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுக்குள் வைத்திருங்கள். பெற்றோர்களிடம் இருந்து நிதி உதவியைப் பெறுவீர்கள். பேசும் போது நிதானத்தை கடைபிடிக்கவும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மகரம்: தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் வெளியூர் பயணம் சாதகமாக அமையும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி நிலவும் என்றாலும், மனதில் எதிர்மறையான தாக்கமும் இருக்கும். நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். ஒரு சொத்து அல்லது வீடு மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News