நாகதோஷம் போக்கும் நாக பஞ்சமி! அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை போக்கும் நாக வழிபாடு!

Snake worship On Naga Panchami : பாம்பையே கழுத்தாபரணமாக அணிந்திருக்கும் சிவனுக்கு நாக பஞ்சமி நாளன்று செய்யும் பூஜைகள், வாழ்வில் வளத்தைத் தருவதுடன், தோஷங்கள் மற்றும் தடைகளை நீக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 1, 2024, 04:21 PM IST
  • ஆடி மாத நாக பஞ்சமி வழிபாடும் சிறப்பும்
  • நாகங்களை தெய்வங்களாக வணங்கும் இந்தியர்கள்
  • நாக தோஷம் போக்கும் நாக பஞ்சமி
நாகதோஷம் போக்கும் நாக பஞ்சமி! அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை போக்கும் நாக வழிபாடு! title=

ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி நாக பஞ்சமி என அழைக்கப்படுகிறது. நாக பஞ்சமி விரதம் குழந்தைகளுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்கானவும் கடைபிடிக்கப்படுகிறது. நாகர்களின் தந்தையும், கருடனின் தந்தையும் ஒன்று என்றாலும், பெற்றெடுத்த தாய் வேறு என்பதால், நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி ஆகிய இரு நாட்களும் சகோதர சகோதரிகளுக்கான பண்டிகைகளாகக் கொண்டாடப்படுகிறது. 

ஆடி மாத வளர்பிறை பஞ்சமி சிறப்பு வாய்ந்தது, தேவர்களின் கடவுளான மகாதேவருக்கு மிகவும் பிடித்தமான இந்த மாதத்தில் பாம்பையே கழுத்தாபரணமாக அணிந்திருக்கும் சிவனுக்கு நாக பஞ்சமி நாளன்று செய்யும் பூஜைகள், வாழ்வில் வளத்தைத் தருவதுடன், தோஷங்கள் மற்றும் தடைகளை நீக்கும். நாகபஞ்சமி நாளன்று, சிவனை வழிபடுவதோடு, நாகதேவர்களையும் வணங்க வேண்டும். இந்த ஆண்டு நாக பஞ்சமி ஆகஸ்ட் 9ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 

நாகதேவி பூஜை: நாக வழிபாடு என்று அழைக்கப்படும் நாகதேவி பூஜை தெய்வ வழிபாட்டுக்கு உகந்த ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பானது.  

காலசர்ப்ப தோஷம் நீங்கும் பரிகாரங்கள்: காலசர்ப்ப தோஷம், ராகு, கேது தோஷங்கள் என நாகம் தொடர்பான எந்தவொரு தோஷம் இருந்தாலும், நாக பஞ்சமி நாளன்று வழிபாடு செய்ய வேண்டும். 

மேலும் படிக்க | வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதியா? ஒவ்வொரு ராசிக்கும் உரிய பரிகாரங்கள்!

நாக பஞ்சமி மந்திரம்

அனந்தம் வாசுகிம் சேஷாம் பத்மநாபம் ச கம்பலம்;
ஶங்கபாலம் தார்தராஷ்ட்ரம் தக்ஷகம் கலியம் ததா;
ஏதானி நவ நமாநி நாகாநாம் ச மஹாத்மானம்;
சாயம்கலே பதேந்நித்யம் ப்ரதஹ்கலே விசேஷதா;
தஸ்மை விஷப்யம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத்..!!

நாகர்களுக்கான இந்த மந்திரம், பாம்பு அவதாரங்கள் அனைத்திற்கும் உரியது. நாக பஞ்சமி நாளில், நாகக் கடவுளின் அனைத்து வடிவங்களும் வழிபடப்பட வேண்டும் என்பதால், இந்த மந்திரத்தைச் சொல்லி வணங்கினாலே போதுமானது. 

நாகபூஜை பலன்கள்

தடைபட்ட பணம் வந்து சேரும்
நாக பஞ்சமி தினத்தில் நாக தேவதைகள் மற்றும் சிவனை வழிபட்டால் வராமல் தேங்கி நிற்கும் வாராக்கடன் வந்து சேரும். நாக பஞ்சமி நாளன்று சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடு நல்லது.

மேலும் படிக்க | எதிர்பாராத பணமழையால் மகிழ்ச்சியில் மூழ்க வைக்கும் புதன் வக்ரப் பெயர்ச்சி! 5 ராசிகளுக்கு செம லக்!

சிவனுக்கு அபிஷேகம்

சிவன் கோவிலில், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், பசும்நெய் ஆகியவற்றை வாங்கிக் கொடுப்பதும், ஓம் நமசிவய மந்திரத்தை ஜெபிப்பதும் நாகதோஷத்தைப் போக்கும். அத்துடன், நாகங்களுக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். 

பாப விமோசனம் 
முற்பிறவியில் செய்த பாவங்களால் தான் இந்த பிறவியில் பல துன்பங்களை அனுபவித்து வருகிறோம் என்றும், புண்ணியம் செய்திருந்தால் இந்த பிறவியில் நல்ல பலன்களை அடையலாம் என்பதும் இந்து மத மரபு. நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகளுக்கு நோய் மற்றும் உடல் கோளாறுகள் இருக்கும் என்று சொல்வார்கள்.

இந்த துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வக்ரத்தில் உள்ள கும்பச்சனி நிவர்த்தி! சனீஸ்வரரின் அருள் பெறும் 5 ராசிகளில் நீங்களும் உண்டா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News