வக்ரத்தில் உள்ள கும்பச்சனி நிவர்த்தி! சனீஸ்வரரின் அருள் பெறும் 5 ராசிகளில் நீங்களும் உண்டா?

Shani Vakra Nivarthi : நவம்பர் 15 ஆம் தேதி சனி கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைவார். சனியின் இந்தப் பெயர்ச்சியால் சாதகமாகவும், பாதகமாகவும் பாதிக்கப்படும் ராசிகளைப் (Zodiac Sign) பற்றி தெரிந்துக் கொள்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 1, 2024, 12:42 PM IST
  • சனி வக்ர நிவர்த்திக்காக காத்துக் கொண்டிருக்கும் ராசிகள்!
  • நவம்பர் 15ம் தேதி சனி வக்ர பெயர்ச்சியாகிறார்
  • சனியின் வக்ர நிவர்த்தியால் பலன் பெறும் அதிர்ஷ்டசாலிகள்
வக்ரத்தில் உள்ள கும்பச்சனி நிவர்த்தி! சனீஸ்வரரின் அருள் பெறும் 5 ராசிகளில் நீங்களும் உண்டா?  title=

மந்தமாக இயங்குவதற்காக அறியப்படும் சனி பகவான்நவ கிரகங்களில் மிக முக்கியமான கிரகம் ஆகும். சனியின் ஒவ்வொரு அசைவும் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும். கர்மக்காரகரான சனி பகவான், செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர். தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ள சனி பகவான் கடந்த ஜூன் 30 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடைந்தார்.

கும்பத்தில் வக்ரத்தில் உள்ள சனி, நவம்பர் 15 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைவார். சனியின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும். சனியின் இந்தப் பெயர்ச்சியால் சாதகமாகவும், பாதகமாகவும் பாதிக்கப்படும் ராசிகளைப் (Zodiac Sign) பற்றி தெரிந்துக் கொள்வோம்.

மேஷம்: சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால், குடும்பத்தில் திருமணம் நடைபெறும் யோகம் ஏற்படும். சமூகத்தில் கெளரவம் அந்தஸ்து உயரும். செலவுக் காலமாக இருப்பதால், வீண் விரயம் செய்யாமல், தாராளமாக தான தர்மங்கள் செய்யுங்கள். குச்சனூர் சனிபகவானை வழிபட்டு வந்தால் நல்லது.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் வக்ர நிவர்த்தி கடன் பிரச்சினைகளை அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் இருப்பதால், கடன் வாங்கி சொத்து வாங்குவதில் தவறில்லை. சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | ஆடி மாதத்தில் சிவன் ருத்ரதாண்டவம் ஆடுகிறாரா? கேதார்நாத்தில் மேகவெடிப்பு! பீதியில் மக்கள்!

மிதுனம்: சனிபகவான் வக்ர கதியில் இருந்து நிவர்த்தி பெறுவது, உங்களுக்கு நிம்மதி பெருமூச்சு விட வைக்கும். நீண்ட காலமாக மனதில் கவலையுடன் இருந்த உங்களுக்கு இப்போது நல்ல காலம் தொடங்கிவிட்டது. திடீர் பணவரவு கிடைக்கும். கஷ்டமில்லாமல் வாழலாம் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும் சனியின் வக்ர நிவர்த்தி இது.

கடகம்: கடகம் ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வக்ர நிவர்த்தி உங்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தடைகளை தாண்டி நல்ல காரியங்கள் நடைபெறும். சஷ யோகம் கொடுக்கும்  சனிபகவானால் நன்மைகளே நடக்கும். 

சிம்மம்: சனி பகவானின் வக்ர நிவர்த்தியால் ராஜயோகமான வாழ்க்கை வாய்க்கும். நோய்கள் தீரும். நீண்டநாள் கடன்கள் தீரும். மனதில் இருந்த ஆசைகள் நிறைவேறும் காலம் இது. அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். சுகங்கள் தேடி வரும். செல்வமும் செல்வாக்கும் கூடும்.

கன்னி: சனிபகவானின் வக்ர நிவர்த்தியால், வேலையில் சிரமத்தை சந்திப்பவர்களுக்கு பிரச்சினை நீங்கும். திருமணத் தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தொழில் வளர்ச்சி பெறும். 

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு, சனியின் வக்ர நிவர்த்தியால் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பணவரவு அதிகரிக்கும் வண்டி வாகனம் வாங்குவீர்கள். அதே நேரத்தில் நோய்களால் பாதிக்கப்படலாம். தாயாரின் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டவும்.

மேலும் படிக்க | எதிர்பாராத பணமழையால் மகிழ்ச்சியில் மூழ்க வைக்கும் புதன் வக்ரப் பெயர்ச்சி! 5 ராசிகளுக்கு செம லக்!

விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வராத பணம் தேடி வரும் என்று சொல்லலாம். வக்ர நிவர்த்தி பெறும் சனீஸ்வரர், கொடுத்த கடன்கள் வசூலாகும் நிலையை ஏற்படுத்துவார். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். 

தனுசு: சனிப்பெயர்ச்சியால் அதிகம் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த தனுசு ராசிக்காரர்களுக்கு ஆசுவாசம் வரும் காலம் நெருங்கிவிட்டது. கடந்த கால கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, தொழில் வியாபாரத்தில் நல்ல தன வருமானமும் லாபமும் கிடைக்கும்.  

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி கொஞ்சம் சிரமமான காலமாகவே இருக்கும். கடினமாக உழைக்க வேண்டிய சமயம் இது, குடும்பப் பொறுப்பு அதிகரிக்கும். அகலக்கால் வைத்தால் ஆபத்தாகிவிடும். உறுதியுடன் உழைத்தால் சனியின் வக்ர காலத்தை எளிதாக கடந்து விடுவீர்கள்.

கும்பம்: கும்ப ராசிக்கு ஆட்சிநாதரான சனி பகவான், உங்கள் ராசியிலேயே வக்ர நிவர்த்தி அடைவதால், சுப விரயம் செய்வது நல்லது. பணத்தை சேர்த்து வைத்தால் தேவையில்லாத செலவு வரும் என்பதால், சொத்துக்களில் முதலீடு செய்துவிடுங்கள். 

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு  தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் வக்ர நிவர்த்தியாவதால் திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும்.பண வரத்தும் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதியா? ஒவ்வொரு ராசிக்கும் உரிய பரிகாரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News