உச்ச ராஜயோகம், அதிர்ஷ்டம்.. குருவால் குபேர வாழ்க்கை பெறப்போகும் ராசிகள்

Vakri Guru in Mesh: ஜோதிட சாஸ்திரத்தில் தேவகுரு வியாழன் ஒரு முக்கியமான மற்றும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறது. ஏனென்றால் குரு மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருகிறார். அதன்படி செப்டம்பர் 4 முதல், குரு மேஷத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 8, 2023, 08:59 AM IST
  • நான்கு ராசிக்காரர்களுக்கு 115 நாட்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.
  • வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
  • திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
உச்ச ராஜயோகம், அதிர்ஷ்டம்.. குருவால் குபேர வாழ்க்கை பெறப்போகும் ராசிகள் title=

மேஷ ராசியில் குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் 2023: ஜோதிடத்தின் படி, வியாழன் மகிழ்ச்சி, செல்வம், புகழ், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட அனைத்து வகையான செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்குகிறார். ஒருவரின் ஜாதகத்தில் குரு சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் தனது வாழ்க்கையில் அனைத்து மகிழ்ச்சியையும் வளத்தையும் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. அதன்படி செப்டம்பர் 4, 2023 முதல் வியாழன் பின்னோக்கி பயணம் செய்யத் தொடங்கியுள்ளார். வரும் 31 டிசம்பர் 2023 வரை இதே நிலையில் தான் இருக்கும். அந்த வகையில் அடுத்த 115 நாட்கள் நான்கு ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் திறக்கும். இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு குரு பம்பர் பலன்களையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தருவார். மேலும் இந்த ராசிகளின் (Zodiac Sign) பல பெரிய ஆசைகள் இந்த காலக்கட்டத்தில் நிறைவேறும். எனவே மேஷ ராசியில் வியாழன்னின் வக்ர பெயர்ச்சி (Jupiter Retrograde in Aries 2023) பயணம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

நான்கு ராசிக்காரர்களுக்கு அடுத்த 115 நாட்கள் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்

மேஷ ராசி (Aries Zodiac Sign) : மேஷ ராசியில் குரு வக்ர பெயர்ச்சி நடப்பது, சுப பலன் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். இந்த நபர்கள் தங்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்திற்கும் நல்ல நேரமாக இருக்கும். திருமணத்திற்கு நல்ல வரன்கள் கிடைக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.

மேலும் படிக்க | வேலை, வியாபாரத்தில் அமோக வெற்றி: புதன் வக்ர பெயர்ச்சியால் இவர்களுக்கு நல்ல காலம்

மிதுன ராசி (Gemini Zodiac Sign) : வியாழனின் தலைகீழ் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்குப் பணவரவை உண்டாக்கும். மிதுன ராசிக்காரர்களின் வருமானம் கூடும். நிறுத்தப்பட்ட பணம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணத்துடன் மரியாதையும் கூடும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

கடக ராசி (Cancer Zodiac Sign) : கடக ராசிக்காரர்களுக்கு தேவகுரு வியாழனின் பிற்போக்கு சஞ்சாரம் வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும். வேலையில்லாதவர்களுக்கு சாதகமான காலம், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். கடக ராசிக்காரர்கள் பணியிடத்தில் மரியாதையும் கௌரவமும் பெறுவார்கள்.

துலாம் ராசி (Libra Zodiac Sign) : வக்ர குரு துலாம் ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். வேலை செய்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நினைத்த சாதனையை அனைத்தையும் நீங்கள் அடைய முடியும். சொத்துக்களால் லாபம் உண்டாகும். துலாம் ராசிக்காரராகள் சாதகமாக வழக்கு தொடரலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

 மேலும் படிக்க | செப்டம்பர் மாத லக்கி ராசிகள் இவைதான்: லட்சுமி அன்னையின் அருள் மழை பொழியும், செல்வம் கொழிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News