செவ்வாய் பெயர்ச்சி... வாழ்க்கையில் புயல் வீசும்... சூதானமா இருங்க மக்களே!

Mars Transit in Pisces: ஆற்றலுக்கான காரணி கிரகமான செவ்வாய் ஏப்ரல் 23ம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகப் போகிறார். செவ்வாய் கிரகம் வலுவிழந்தாலோ அல்லது செவ்வாயின் நிலை சாதகமாக இல்லை என்றாலோ, தன்னம்பிக்கை குறைவு, தைரியமின்மை ஆகியவை ஏற்படும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 10, 2024, 04:14 PM IST
  • செவ்வாய் பெயர்ச்சியின் தாகக்த்தினால், சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • உடல் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
செவ்வாய் பெயர்ச்சி... வாழ்க்கையில் புயல் வீசும்... சூதானமா இருங்க மக்களே! title=

Mars Transit in Pisces: ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகம் நெருப்பு கிரகம் என்று விவரிக்கப்படுகிறது. ஆற்றலுக்கான காரணி கிரகம் செவ்வாய். செவ்வாய் ஏப்ரல் 23 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகப் போகிறார். செவ்வாய் கிரகம் வலுவிழந்தாலோ அல்லது செவ்வாயின் நிலை சாதகமாக இல்லை என்றாலோ, தன்னம்பிக்கை குறைவு, தைரியமின்மை ஆகியவை ஏற்படும். மனதைரியம், ஆற்றல் மற்றும் வீரம் ஆகியவை குறைகிறது. இந்நிலையில், செவ்வாய் மீனத்தில் நுழையும் போது, ​​6 ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான ஏற்படும் என ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர்.

செவ்வாய் பெயர்ச்சியின் தாகக்த்தினால், சில ராசிக்காரர்கள் குடும்பம், சமூகம் மற்றும் வியாபார விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். செவ்வாய் பெயர்ச்சி எந்த 6 ராசிகளுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்:  செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

செவ்வாய் பெயர்ச்சி காரணமாக ரிஷபம் ராசிக்காரர்கள் குடும்ப விஷயங்களில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். இந்த காலகட்டத்தில் உறவினர்களுடன் மனம் திறந்து பேசுவதன் மூலம், உறவை நல்ல முறையில்  பராமரிக்கலாம். உங்கள் மனம் அமைதியான சூழலைப் பெற விரும்பும். ஆனால், அதற்கு நிறைய முயற்சி செய்ய வேண்டும். சஞ்சலமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சொத்து தொடர்பான பிரச்சனைகளில் பொறுமையை கையாளவும்.

சிம்ம ராசி: செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

செவ்வாய் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில்  தாக்கத்தை ஏற்படுத்தும். உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மிகவும் சோர்வாக உணர்வீர்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளால், உங்கள் வேலையில் 100 சதவிகிதம் திறனை கொடுக்க முடியாது. இதனால் வேலையில், தொழில் துறையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் அதிகாரிகளும் உங்கள் மீது அதிருப்தி கொள்ளலாம். அனுசரித்துச் செல்வதன் மூலம் பகைமையை தவிர்க்கலாம். 

கன்னி ராசி: செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

செவ்வாய் கிரகத்தின் இந்த சஞ்சாரத்தின் போது, ​​கன்னி ராசிக்காரர்கள் சற்று குழப்பத்துடன் இருக்கலாம். மேலதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். இந்த காலகட்டத்தில் எதிர்மறை எண்ணங்கள் உங்களை ஆட்கொள்ளும். எனவே தியானத்தின் உதவியை நாடுவது பலன் தரும்.  உங்கள் திருமண வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மூன்றாம் நபரின் குறுக்கீடு காரணமாக, குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளை இனி அசைச்சுக்க முடியாது..!!

துலாம் ராசி:செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

செவ்வாய் பெயர்ச்சி காரணமாக  துலாம் ராசியினருக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். செரிமான பிரச்சனை, அல்சர் போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம். இருப்பினும், இந்த நேரத்தில், எச்சரிக்கையாக இருந்தால், பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். உங்களின் குறிக்கோளை நிறைவேற்ற இடர்களை சந்திக்க நேரிடலாம். உங்கள் உடல்நலம் குறித்து அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மகர ராசி: செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

மகர ராசிக்காரர்களுக்கு, செவ்வாய் பெயர்ச்சி உணர்ச்சி ரீதியாக சற்று பலவீனப்படுத்தும். சில உறவுகளுடன் சண்டைகள் சச்சரவுகள் அதிகரிக்கலாம். ஆனால், இந்த நேரத்தில் கொஞ்சம் கவனமாக வேலை செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையுடன் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். புதிய நபர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வாழ்க்கைத் துணைவரிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.  ஆர்வத்தை தொழில் ரீதியாக மாற்ற விரும்பும் நபர்கள். அத்தகையவர்கள் இந்த காலகட்டத்தில் வெற்றியைப் பெறலாம். 

கும்ப ராசி: செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

செவ்வாய்ப் பெயர்ச்சியின் போது கும்ப ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை பேண வேண்டும். மேலும், இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் உங்களுக்கு கல்வியில் சில தடைகளை தரலாம். மேலும், உங்கள் உடல்நிலை சரியில்லாததால், நீங்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட முடியும். மேலும், இந்த பெயர்ச்சி உங்களுக்கு சில கண் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு குபேர யோகம்... அட்டகாசமான பண வரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News