புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு குபேர யோகம்... அட்டகாசமான பண வரவு

Budhan Peyarchi Palangal: புதன் பெயர்ச்சி மற்றும் இதனால் உருவாகும் ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இதனால் அதிகப்படியான நற்லன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 10, 2024, 11:48 AM IST
  • லக்ஷ்மி நாராயண யோகத்தின் தாக்கத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம் கிடைக்கும்.
  • திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு குபேர யோகம்... அட்டகாசமான பண வரவு title=

Budhan Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக மாற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக கிரகங்களின் ராசி மாற்றங்களே பிரபலமாக அறியப்படுகின்றன. எனினும், ராசி மாற்றங்களைத் தவிர, கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என இன்னும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் அனைத்து ராசிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. 

மீனத்தில் லக்ஷ்மி நாராயண யோகம்

கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் கிரகம் மீனத்தில் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகியுள்ளார். மீனத்தில் புதனின் பெயர்ச்சி காரணமாக பல வித சுப ராஜயோகங்கள் உருவாகின்றன. மீனத்தில் புதனின் பெயர்ச்சியின் போது சூரியன், சுக்கிரன் மற்றும் ராகுவுடன் புதனின் சேர்க்கை நடக்கும். இதனால் லக்ஷ்மி நாராயண யோகம், சதுர்கிரஹி யோகம் மற்றும் புதாதித்ய யோகம் போன்ற ராஜயோகங்களும் உருவாகின்றன். புதன் பெயர்ச்சி மற்றும் இதனால் உருவாகும் ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இதனால் அதிகப்படியான நற்லன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். பல வித வெற்றிகள் கிடைக்கும். அந்த ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

மிதுனம் (Gemini)

மீனத்தில் புதன் பெயர்ச்சியால் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம் காரணமாக குழந்தைகளின் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். வாழ்க்கையில் வசதிகள் பெருகும். பணி இடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை வலுவடையும். புதிய வேலைகளைத் தொடங்க இது நல்ல நேரம்.

சிம்மம் (Leo)

புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். வேலை நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.... முழு ராசிபலன் இதோ

கன்னி (Virgo)

லக்ஷ்மி நாராயண யோகத்தின் தாக்கத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம் கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். இந்த காலகட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். பண வரவு அதிகமாவதால் நிதி நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 
 
தனுசு (Sagittarius)

புதனின் ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு இது நல்ல காலம். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் வெற்றி காண்பார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த காலத்தில் திருமணம் நிச்சயிக்கப்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகளை நடக்கும். வருமானத்திற்கான புதிய பல வழிகள் திறக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ‘இந்த’ 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு! இன்றைய ராசிபலனை தெரிந்து கொள்ளுங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News