ராகு தோஷத்தை போக்கும் ஆஞ்சநேயர்! அனுமானை எப்படியெல்லாம் வழிபடலாம்? செவ்வாய்க்கிழமை வழிபாடு

Rambakth Hanuman Worship :  இறைவனை வழிபட பல வழி முறைகள் உள்ளன, இறைவனின் பக்தராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆஞ்சநேயரை வழிபட்டால், பெருமாளின் அனுக்கிரகமும் கிட்டும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 29, 2024, 09:14 PM IST
  • ஆஞ்சநேயர் வழிபாடு விதங்கள்
  • ராமபக்தரை வணங்கினால் காரியத்தடைகள் நீங்கும்!
  • ராகு தோஷத்தை போக்கும் ஆஞ்சநேயர்
ராகு தோஷத்தை போக்கும் ஆஞ்சநேயர்! அனுமானை எப்படியெல்லாம் வழிபடலாம்? செவ்வாய்க்கிழமை வழிபாடு title=

ராமரின் அதிபக்தரான ஆஞ்சநேயரை செவ்வாய்க்கிழமை நாளில் வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும். அனுமன், மாருதி, அஞ்சனை  மைந்தன், வாயுபுத்திரன், ராம தூதன் என பல்வேறு பெயரில் அழைக்கப்படும் ராம பக்தர் அனுமாரை வழிபட்டால் நோயின்றி வாழலாம். இறைவனை வழிபட பல வழி முறைகள் உள்ளன, இறைவனின் பக்தராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆஞ்சநேயரை வழிபட்டால், பெருமாளின் அனுக்கிரகமும் கிட்டும்.

ஆஞ்சநேயரை வழிபடுவதால் அறிவு, வலிமை, புகழ், துணிவு, துணிவு, நோய் இல்லாத வாழ்வு, ஊக்கம், சொல் ஆற்றல்,  வாக்கு வன்மை என அனைத்தும் சித்திக்கும். அனுமாரை வழிபட மிகவும் சிறந்த வழி என்ன தெரியுமா?

ராம நாம வழிபாடு
அனுமனின் அருளை எளிதில் பெற  ராம நாம ஜெபம் ஒன்றே எளிய வழி. எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிருப்பவர்  அனுமன் என்பது முன்னோர் வாக்கு. பக்தியுடன் ராம நாமம் ஜெபிக்கும் இடத்தில் ஆஞ்சநேயர் இருப்பார் என்றால், அவர் நாமம் ஜெபிக்கும் நமக்கும் அஞ்சனை மைந்தனின் அருள் பூரணமாக கிட்டும்.

மேலும் படிக்க | சுக்கிரன் கிரகத்தை வட்டமிடும் மர்மமான வளையம்! 5000 மைல் நீள வளையத்திற்குள் வெள்ளி கிரகம்!

செவ்வாய்க்கிழமை வழிபாடு
அனுமாரை வழிபட செவ்வாய்க்கிழமை மிகவும் உகந்த நாள். அன்று அஞ்சனை மைந்தனை வழிபட்டு பூந்தியை நிவேதனமாக வைத்து, அவற்றை அனைவருக்கும் பிரசாதமாக கொடுத்தால், வல்வினைகள் குறையும் எனது வட இந்தியாவில் நம்பிக்கை. 

வெற்றிலை மாலை
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் காரியத் தடைகள் நீங்கும். திருமணத் தடைகள் நீக்க வெற்றிலை மாலை வழிபாடு சிறந்தது. நுனியும் காம்பும் உடையாத தூய வெற்றிலைகளை மாலையாக தொடுத்து செவ்வாய்க்கிழமை/சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சாற்றி வந்தால், காரியத் தடைகள் நீங்கும். வியாழக்கிழமை நாளில் வெற்றிலை மாலை சாற்றி அனுமாரை வழிபட்டால், நோய்ப்பிணி அகலும், ஆரோக்கியம் அதிகரிக்கும். 

அனுமாரின் வால் வழிபாடு
அனுமனுக்கு வாலில் ஆற்றல் அதிகம். இலங்கைக்கு ராமதூதராக சென்றிருந்த அனுமான், தனது வாலில் வைத்த தீயால், இலங்கையின் சில பகுதிகளை சாம்பலாக்கி தனது பலத்தையும், தனது வாலின் மகத்துவத்தையும் உலகிற்குக் காட்டினார். அனுமன் வால் வழிபாடு காரியத் தடைகளை நீக்கும்.  வெற்றியை நமக்கு அளிக்கும்.  

சுந்தர காண்டம்
செவ்வாய்க்கிழமைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வது அனுமாரின் அருளையும், ராமரின் அருளாசியையும் பெற்றுத் தரும்.  

மேலும் படிக்க | கலகத்தை கலைத்து குடும்பத்தில் ஒற்றுமையை நிலைக்க செய்யும் ஆடி செவ்வாய் விரதம்!

வடை மாலை வழிபாடு 
ராகுவால் ஏற்படும் தோஷங்கள் வாழ்வில் கஷ்டத்தைக் கொடுக்கும். அதனைப் போக்க அனுமான் வழிபாடு சிறந்தது.  நவகிரகங்களில் நிழல் கிரகம் என்று கருதப்படும்  ராகுவுக்கு உரிய தானியம் உளுந்து.  ராகுவிற்கு பிரியமான உளுந்தை அரைத்து, அதில் வடை செய்து மாலையாக்கி அனுமனுக்கு அணிவித்தால் ராகு தோஷம் நீங்கும்.

ராகுவும் அனுமாரும்
அனுமன் சிறு குழந்தையாக இருந்த போது, சூரியனை  பழம் என்று நினைத்து, அதனை பிடிப்பதற்காக குழந்தை அனுமன் சூரியனை நோக்கிப் பறந்தார். வாயுபுத்திரனின் மகனாக இருந்ததால், சிறிய குழந்தையாக இருந்தாலும், சூரியனையே விழுங்குவதற்காக வாயு வேகத்தில் பறந்து சென்றார். அப்போது, ராகு கிரகமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உருவாக்குவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், ராகு பகவானால், ஆஞ்சநேயரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அனுமாரின் வீரத்தைப் பார்த்த ராகு, அனுமனுக்கு ஒரு வரம் கொடுத்தார். அதன்படி, தனக்கு மிகவும் பிரியமான தானியமான உளுந்தால், தன்னைப்போன்ற வளைந்த உருவம் கொண்ட உணவுப் பண்டத்தை செய்து அனுமாருக்கு சாற்றி வழிபட்டால், அவரை ராகுவின் தோஷம் எதுவும் பீடிக்காது என்று அனுமாருக்கு ராகு வரம் கொடுத்தார்.  

உப்பு மற்றும் மிளகு சேர்த்து செய்யப்படும் வடை மாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிப்பட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். ராகுவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்..

துளசி மாலை வழிபாடு
ஆன்மீகத்தில் முக்கியத்துவம் வாந்த துளசியை மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபட்டால் நோய்கள் தீரும், லட்சுமிக்கு உகந்த துளசியை அனுமாருக்கு சாற்றுவதால் செல்வம் பெருகும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | ஆடி கிருத்திகையில் ஆடல்வல்லானின் மகன் மாலோன் மருகன் கார்த்திகேயனை வணங்குவோம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News