ராகு பெயர்ச்சி 2023: ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்தம் காலம் தொடங்கும்!

ராகு பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில் ராகு கிரகம் நிழல் கிரகமாகக் கருதப்படுகிறது. ராகுவின் ராசி மாற்றத்தால் சிலரது வாழ்வில் அசுப விளைவுகள் ஏற்படும். ஆனால், சிலருக்கு வாழ்க்கையில் சுப பலன்கள் கிடைக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 19, 2022, 06:48 PM IST
  • வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
  • பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
  • ராகு சஞ்சார காலத்தில் தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும்.
ராகு பெயர்ச்சி 2023: ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்தம் காலம் தொடங்கும்! title=

ராகு ராசி மாற்றம் 2023: ஜோதிடத்தில், ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. நிழல் கிரகமாக இருந்தாலும் அதன் தாக்கத்தை ராசிக்காரர்களின் வாழ்வில் தெளிவாகக் காணலாம். 2023 ஆம் ஆண்டில், ராகு தனது ராசியை மாற்றப் போகிறார். இது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரப்படி அக்டோபர் 30-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ராகு செவ்வாய் கிரகத்தை விட்டு விலகி மீன ராசியில் நுழைகிறார். மீன ராசியில் ராகுவின் பிரவேசத்தால் பல ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்:

ஜோதிட சாஸ்திரப்படி, மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு ராகுவின் பிரவேசம், மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். இவர்களுக்கு குறிப்பாக பண பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும்.

கடகம்:

ஜோதிட சாஸ்திரத்தின் படி, புதிய ஆண்டில் ராகு ராசி மாறுவது கடக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த நேரத்தில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இது மட்டுமின்றி புதிய வீடு, வாகனம் வாங்கலாம். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனினும் பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ராகு சஞ்சார காலத்தில் தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும்.

மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தில் சூரியனைப் போல் பிரகாசிக்கும் ‘சில’ ராசிகள் இவை தான்! 

மீனம்:

2023 அக்டோபரில் ராகு மேஷ ராசியிலிருந்து விலகி மீன ராசியில் நுழையும் நிலையில் மீன ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பொருளாதார முன்னேற்றம் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. கடனாக கொடுத்த பணத்தையும் இந்த காலகட்டத்தில் திரும்பப் பெறலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | டிசம்பரில் இரு முறை பெயர்ச்சி ஆகும் சுக்கிரனால் ‘4’ ராசிகளுக்கு சுக்கிர திசை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News