சனீஸ்வரரின் மனதை மாற்றும் ஒரே மந்திரம்! சனியின் பாதிப்புகள் குறைக்கும் தந்திர உபாயம்!

Shaneeswar And Hanuman Worship : சனீஸ்வரரால் ஏற்படும் துன்பத்தைப் போக்கும் பெயரை தெரிந்துக் கொள்வோம். அதற்கான புராணக் கதை இராமாயணத்தில் இருக்கிறது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 23, 2024, 10:53 PM IST
  • சனீஸ்வரரால் ஏற்படும் துன்பங்களை நீங்கும் மந்திரம்!
  • அனுமாரின் உத்தரவுக்கு பணிந்த சனீஸ்வரர்
  • ராமநாமம் செய்யும் நற்பலன்கள்!
சனீஸ்வரரின் மனதை மாற்றும் ஒரே மந்திரம்! சனியின் பாதிப்புகள் குறைக்கும் தந்திர உபாயம்!  title=

சனீஸ்வரர் நீதிமான், ஒருவரின் பாவ புண்ணியங்களுக்கேற்ப பலன்களை தரும் நீதிமானாக விளங்குபவர். அதனால் தான் ஒருவரின் ஜாதகத்தில் சனித்திசையும், ஏழரைச் சனியும் வந்துவிட்டால் வாழ்க்கையில் அனுபவிக்காத பல துன்பங்களும் வந்துவிடும் என பயப்படுவார்கள். இந்து மதத்தில், அனைத்திற்கும் ஒரு உபாயம் இருக்கிறது. இறைவழிபாடு, அனைத்துவிதமான துன்பங்களை தொலைத்துவிடும். ஆனால், கடவுளை வணங்க வேண்டும் என்ற எண்ணத்தை தோன்றாமல் தடுத்துவிடுவது சனீஸ்வராக இருந்தால் என்ன செய்வது?

மனிதர்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான், சில எளிய பரிகாரங்களை நமது அன்றாட வாழ்க்கையிலேயே நம் முன்னோர்கள் புகுத்தினார்கள். அதில் ஒன்று தான் இறைவனின் நாமத்தை ஜபிப்பது. மற்றொன்று, குழந்தைக்கு பெயர் வைக்கும்போது இறைவனின் பெயரை வைப்பது. 

குழந்தைகளை பெயர் சொல்லி அழைக்கும் சாக்கிலாவது இறைவனின் பெயரை உச்சரித்தால், அது ஒருவரின் பாவத்தில் இருந்து நிவாரணம் கொடுக்கும் என்பதற்காகவே இந்தியாவில் இந்த வழக்கம் தொன்று தொட்டு தொடர்கிறது. இதற்காக பல புராண கதைகள் சொல்லப்பட்டாலும், சனீஸ்வரரால் ஏற்படும் துன்பத்தைப் போக்கும் பெயரை தெரிந்துக் கொள்வோம். அதற்கான புராணக் கதை இராமாயணத்தில் இருக்கிறது. 

சீதையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இராமனுக்கும், இலங்கையின் அரசன் அசுரன் இராவணனுக்கும் நடந்த போரின்போது இலட்சுமணன் மயங்கிவிட்ட நிலையில், அவரை காப்பாற்றத் தேவையான மூலிகையை சஞ்சீவி மலையில் இருந்து கொண்டு வர அனுமார் சென்றார்.

ஆனால், இலட்சுமணனை காப்பாற்றும் மூலிகையை கொண்டு வரச் செல்ல முயன்ற அனுமாருக்கு வாழ்த்து சொன்ன இராமன்,  இக்கட்டான சூழலில்  என்னை நினைவில் வைத்துக்கொள் என்று சொல்லி அனுப்பினார்.

மேலும் படிக்க | சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்னும் 4 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தொடங்கும்

இலட்சுமணன் பிழைக்கக்கூடாது என்று இலங்கை அரசன் நினைத்தான். சர்வ வல்லமை பெற்றிருந்த இராவணன் தனது தவவலிமையால் நவக்கிரகங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். இலட்சுமணனுக்கு தேவையான மூலிகைகளை எடுத்துச்செல்வதற்கு அனுமனை அனுமதிக்கக் கூடாது என்று நினைத்து, அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி நவக்கிரகங்களுக்கு மட்டுமே உள்ளது என்று இராவணனுக்கு சொல்லப்பட்டது. எனவே, நவகிரகங்களில் சனிபகவானை அழைத்த இராவணன், ஆஞ்சநேயர் மூலிகையை எடுப்பதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டான்.

இராவணனின் கட்டளையை ஏற்ற சனி பகவான், சஞ்சீவி மலையில் மூலிகையைத் தேடிக்கொண்டிருந்த அனுமரை பார்த்துவிட்டார். மூலிகைக்கு பதிலாக அனுமன் சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து கொண்டு செல்ல முயன்றபோது, சனீஸ்வரர் தடுத்தார் 

என்னை விட்டுவிடு, முக்கிய வேலையிருக்கிறது என்ற அனுமனின் கோரிக்கைக்கு சனிபகவான் செவிசாய்க்கவில்லை. வேறுவழியில்லாமல், ஆஞ்சநேயர் சனிபகவானை தனது பலத்தால் நசுக்கினார். தாங்க முடியாத வலியால் கதறிய சனி பகவான் தம்மை விட்டுவிடும்படி அனுமனிடம் கேட்டுக் கொண்டார். அனுமனின் மனதை மகிழ்விக்க, இராமபக்தனான அவர் முன் "இராமா.. இராமா" என்று அழைத்தார். அனுமனின் பிடி தளர்ந்தது.

சனீஸ்வரரை விட்டுவிட வேண்டுமானால், ஒரு வாக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்ட ஆஞ்சநேயர், இராம நாமத்தால் தப்பி பிழைத்த நீ, உன்னால் பீடிக்கப்பட்டவர்களை துன்புறுத்தும்போது அவர்கள் ஸ்ரீஇராமனின் திருநாமத்தைச் சொன்னால் விட்டுவிட வேண்டும் என்று சொன்னார். அதற்கு சனிபகவான் ஒப்புக் கொண்ட பிறகே ஆஞ்சநேயர் சனிபகவானை விடுவித்தார்.

எனவே, சனிதிசை நடப்பவர்களும், சனி தோஷம் உள்ளவர்களும், ஏழரைச் சனியால் பீடிக்கப்பட்டவர்களும் ராம நாமத்தை சொல்லி வழிபட்டால் சனிபகவானின் தொல்லையிலிருந்து மீளலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் உதயத்தால் யாருக்கெல்லாம் பணம் கொட்டும்? அறிவுக்காரகர் கொடுக்கும் அதிர்ஷ்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News