தினசரி ராசிபலன் - இன்று யார் யாருக்கு நல்ல நேரம்?

நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஏப்ரல் 05, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.

Written by - RK Spark | Last Updated : Apr 5, 2023, 07:37 AM IST
  • குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம்.
  • தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.
  • தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.
தினசரி ராசிபலன் - இன்று யார் யாருக்கு நல்ல நேரம்? title=

அனைத்து இராசி அறிகுறிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

மேஷம்

இன்று உங்களுக்கு பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மேலும் படிக்க | Surya Gochar 2023: வெற்றி மீது வெற்றி வந்து சேரும்... முன்னேற்றம் காணும் இந்த 4 ராசிகள்!

மிதுனம்
இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

கடகம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கன்னி
இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மன நிம்மதி குறையும். வியாபாரம் ரீதியாக சிந்தித்து செயல்பட்டால் லாபகரமான பலனை அடைய முடியும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

துலாம்

இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவ விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் அனுகூலம் ஏற்படும்.

தனுசு

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

மகரம்

இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

கும்பம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவி கிடைத்து மன அமைதி ஏற்படும்.

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 2 வருடங்கள் கருணை காட்டுவார் சனிபகவான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News