சனிபெயர்ச்சி 2022: சனியின் ராஜயோகத்தால் பண மழையில் நனையபோகும் 4 ராசிகள்

நீதியின் கடவுளான சனி, ராசி மாற்றத்துகுப் பிறகு தீபாவளி முதல் 4 ராசிகளுக்கு பண மழையை கொடுக்கப்போகிறார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 9, 2022, 06:04 AM IST
  • சனி பெயர்ச்சி 2022
  • யோகம் கிடைக்கும் 4 ராசிகள்
  • பணப் பிரச்சனையே இருக்காது
சனிபெயர்ச்சி 2022: சனியின் ராஜயோகத்தால் பண மழையில் நனையபோகும் 4 ராசிகள் title=

Shani Rashi Parivartan 2022: நீதியின் கடவுள் என்று அழைக்கப்படும் சனி, அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால், இதுவரை அவதிப்பபட்டு வந்த 4 ராசிக்காரர்களுக்கு யோகங்கள் கிடைக்கப்போகிறது. சனியின் சஞ்சாரம் காரணமாக அந்த நான்கு ராசிக்காரர்களும் அசுப பலன்களில் இருந்து விடுபடுவதோடு, தடைபட்ட பல வேலைகளும் தானாக முடிவடையும். இந்த நேரத்தில் அவர்கள் சமூகத்தில் பணம் மற்றும் கௌரவத்துடன் இருப்பார்கள். இந்த ஆண்டு தீபாவளி அவர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். 

சனிபகவானின் அருள் 

கடகம்: இந்த நேரம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். பல புதிய ஒப்பந்தங்கள் வரலாம். சமய-ஆன்மிகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள்.

கௌரவம் அதிகரிக்கும்

மிதுனம்: சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் இந்த ராசிக்காரர்களுக்கு கௌரவம் உயரும். அவர்களுக்கு இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும், திடீரென்று எங்கிருந்தோ லாபம் கிடைக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். எந்த ஒரு சுப நிகழ்ச்சியையும் வீட்டில் செய்யலாம்.

விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். கல்வியுடன் தொடர்புடையவர்கள் சுப பலன்களைப் பெறலாம். நீங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள், எனவே நீங்கள் வணிகத்தில் புதிய உயரங்களை அடைய முயற்சிப்பீர்கள். பழைய நோய் குணமாகும். சமூகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.

நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுதலை 

மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு நீதிக் கடவுளான சனிபகவான் வழிபடுவது நன்மை தரும். பழைய நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபடலாம். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

 

மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News