இந்த 5 ராசிகளுக்கு சனியால் ராஜ வாழ்க்கை அமையும், அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

Shani Vakri 2023 in Tamil: சனியின் பெயர்ச்சியில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் விரைவில் சனி வக்ரமாக நகரப் போகிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 8, 2023, 04:31 PM IST
  • வக்ரம் பெற்றால் சனிபகவான் இன்னமும் மெதுவாக நகர்வார்.
  • சனி போல் கொடுப்பார் இல்லை சனி போல் கெடுப்பார் இல்லை.
  • சனி வக்ரமடையும் கால கட்டத்தில் என்னென்ன நன்மைகளை செய்யப்போகிறார் என்று பார்க்கலாம்.
இந்த 5 ராசிகளுக்கு சனியால் ராஜ வாழ்க்கை அமையும், அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் title=

சனி வக்ர பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில், சனி நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்து பலன்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சனி.சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 109 டிகிரியில் இருக்கும் போது வக்ர நிவர்த்தியடைவார். அந்தவகையில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது ராசியான கும்பத்தில் நுழைந்து தற்போது ஜூன் 17-ம் தேதி முதல் வக்ரநிலையில் சஞ்சரிக்கப் போகிறார். சனியின் வக்ரநிலை அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். சனி சில ராசிக்காரர்களுக்கு தொல்லை தருவார், மறுபுறம் சனி சில ராசிக்காரர்களுக்கு ராஜாவைப் போல் வைத்திருக்க முடியும். சனியின் வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வம், உயர் பதவி, புகழ் மற்றும் மரியாதையை கொண்டு வரும்.

சனி ஏற்கனவே மெதுவாக நகரும் கிரகம். வக்ரம் பெற்றால் சனிபகவான் இன்னமும் மெதுவாக நகர்வார். சனி வக்ரம் பெற்றால் தான் தர வேண்டிய பலன்களை தர தடையும், தாமதம், இழப்பும் எற்படும். சுப பலன் தர வேண்டிய சனி வக்கிரம் பெற்றால் சுப பலனை தரமாட்டார். சனி போல் கொடுப்பார் இல்லை சனி போல் கெடுப்பார் இல்லை என்று சொல்வார்கள். எனவே சனி வக்ரமடையும் கால கட்டத்தில் என்னென்ன நன்மைகளை செய்யப்போகிறார் என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க | ஞாயிற்றுக்கிழமை பரிகாரங்கள்..! சூரிய பகவானின் அருளால் செல்வம் கிடைக்கும்..!

சனியின் வக்ரநிலையின் எந்த ராசிகளுக்கு நன்மையை தரும்

மேஷம்: சனியின் வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய ஆதாரங்கள் மூலம் பணம் கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் பணிகள் பாராட்டப்படும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். உணவு விசயத்தில் கவனம். வெளியில் செல்வதையும் காரமான உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்த்து விடுங்கள்.

ரிஷபம்: சனியின் வக்ர பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுபமான பலன் தரும். உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏற்ற நேரம். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். தொழில்-வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், மரியாதை கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். அக்கம்பக்கத்தாருடன் மனஸ்தாபங்கள் நீங்கும். சொந்தபந்தங்களின் வீட்டு விஷேசங்களில் அதிகம் பங்கேற்பீர்கள்.

மிதுனம்: சனியின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நிதிப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணத்தை தருவார். வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு வழி திறக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியை தரும். உங்கள் படைப்புகளை மக்கள் பாராட்டுவார்கள். தள்ளிப் போய்கொண்டிருந்த திருமணமும் நல்ல இடத்தில் முடியும். வெகுநாட்களாக நினைத்துக்கொண்டிருக்கும் சுப காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

தனுசு: சனியின் வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றும். தூங்கிக் கொண்டு இருந்த அதிர்ஷ்டம் எழுந்திருக்கும். நிறுத்தப்பட்ட வேலைகள் நடக்கும். வருமானம் அதிகரிக்கும். பதவி, பணம், மரியாதை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், இதுவே சரியான நேரம். திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசி முடிவு செய்யலாம். நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும் தேவைகள் நிறைவேறும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு உதயம்: இந்த யோகத்தால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News