மார்ச்சில் நடக்க இருக்கும் 4 கிரக பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு

Horoscope March 2023: மார்ச் மாதத்தில் நான்கு கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதனால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன் கிடைக்கும். அந்த ராசிக்காரர்கள் யார் என இங்கே காணலாம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 21, 2023, 05:09 PM IST
  • கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.
  • 4 கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது.
  • மார்ச் 2023 மாத ராசிபலன்.
மார்ச்சில் நடக்க இருக்கும் 4 கிரக பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு title=

கிரக பெயர்ச்சி மார்ச் 2023: மார்ச் மாதத்தில் 4 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. இந்த மாதத்தில் செவ்வாய் மிதுன ராசியிலும், சுக்கிரன் மேஷ ராசியிலும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல் மார்ச் 15 ஆம் தேதி சூரியன் குருவின் ராசியான மீனத்தில் பெயர்ச்சியாக்குகிறார். மறுநாள் மார்ச் 16ஆம் தேதி புதன் மீன ராசிக்கு வந்து புதாதித்ய யோகத்தையும் ஏற்படுத்துவார். மேலும் மார்ச் 31ஆம் தேதி புதன் மீண்டும் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார். இதுபோன்ற சூழ்நிலையில், ரிஷபம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். அந்த ராசிக்காரர்கள், யார் என இந்த தொகுப்பில் காணலாம்.

ரிஷபம் ராசிக்காரர்கள் மார்ச் மாதம் உருவாகும் கிரகங்களின் சேர்க்கையால் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். அவர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். தொழிலில் சிறந்த வாய்ப்புகளைப் பெற முடியும். பணியிடத்தில் சிறந்த பணிச்சூழல் இருக்கும் மற்றும் உங்களின் பணி செயல்திறன் புதிய அங்கீகாரத்தைப் பெறும். இந்த நேரத்தில் சம்பள உயர்வு தொடர்பான சில நல்ல செய்திகளை பெறுவீர்கள். 

மேலும் படிக்க | 12 ஆண்டுக்குப் பிறகு சனி சுக்கிரன் சேர்க்கை, இந்த ராசிகளுக்கு புரமோசன் கிடைக்கும் 

  • பரிகாரம்: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லட்சுமி தேவிக்கு பாயசம்கீர் நைவேத்தியம் செய்யுங்கள்.

இந்த மாதம் செவ்வாய் உங்கள் ராசிக்குள் பெயர்ச்சியடைவார். அதன் தாக்கத்தால் உங்களின் வீரம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் தொழில் முடிவுகள் எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த மாதம் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குவதில் உதவியாக இருப்பார்கள். 

  • பரிகாரம்: புதன் கிழமைதோறும் பசுவிற்கு கீரையை உணவாக கொடுக்க வேண்டும்.

மார்ச் மாதம் கடக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த மாதம் உழைக்கும் மக்கள் முன்னேற்றம் அடைவார்கள், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரியும் உற்றார் உறவினர்களின் உதவியால் வாழ்வாதார ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த மாதம் தொழில்முறை பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொழில் வாய்ப்புகள் கிடைக்கலாம்.

  • பரிகாரம்: ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு பாலுடன் கங்கை நீரை சமர்பிக்கவும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகப் பெயர்ச்சி சிறப்பு பலன்கள் தரப் போகிறது. குறிப்பாக இந்த ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருளும், பணியிடத்தில் சிறப்பாக செயல்படும் வகையில் கௌரவம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறுவீர்கள். இந்த நேரத்தில், மாணவர்கள் உயர் கல்விக்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். 

  • பரிகாரம்: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வடகிழக்கில் பசு நெய் தீபம் ஏற்றவும்.

மீன ராசிக்காரர்களுக்கு, இந்த மாதம் நிதி நிலை சிறப்பாக இருக்கும். இந்த மாதம் உங்கள் ராசியில் புதன் மற்றும் குரு இணைவதால் புத்தாதித்ய யோகம் உருவாகும். இந்த யோக பலன் மூலம் உங்களின் சம்பளத்தில் நல்ல உயர்வு ஏற்படும். மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். 

  • பரிகாரம்: வியாழக்கிழமையில் பசுவிற்கு உணவளிக்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கும்பத்தில் இணையும் சனி - புதன்! மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ‘3’ ராசிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News