‘இந்த’ 5 ராசிகளுக்கு 2024ஆம் ஆண்டு பணமழை கொட்டும்! யார் யார் தெரியுமா?

Rich Zodiac Signs In 2024: புத்தாண்டு வரவுள்ளதையொட்டி, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்பாேகிறது என்பதை பார்க்கலாமா?   

Written by - Yuvashree | Last Updated : Nov 15, 2023, 06:43 PM IST
  • 2024ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது..
  • ஒரு சில ராசிக்காரர்கள் பணக்காரராக மாற உள்ளனர்.
  • செல்வ மழை கொட்டப்போகும் ராசிகள்.
‘இந்த’ 5 ராசிகளுக்கு 2024ஆம் ஆண்டு பணமழை கொட்டும்! யார் யார் தெரியுமா?  title=

பணமழை கொட்டப்போகும் ராசிகள்..

2024ல் எந்தெந்த ராசிக்காரர்கள் செல்வந்தர்களாக இருப்பார்கள் என்பதை அறிய ஆர்வமாக உள்ளீர்களா? ஜோதிட பலன்கள் மற்றும் கிரக சீரமைப்புகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், அடுத்த ஆண்டு யார் யாருக்கு  சாத்தியமான செல்வ வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இங்கு காணலாம். பொதுவாகவே புத்தாண்டின் பாேது 12 ராசிகளில் இருக்கும் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது, ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். இதனால், சில ராசிகளுக்கு அதிக வருவாய் ஈட்டும் வாய்ப்புகளும் வந்து சேரும். அந்த ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம். 

1.ரிஷபம்:

2024ஆம் ஆண்டு, ரிஷப ராசிக்காரர்கள்தான் பணக்கார ராசியை சேர்ந்தவர்களாக இருக்கப்போகின்றனர். ரிஷப ராசிக்காரர்களுக்கு இயல்பிலேயே கடினமாக உழைக்கும் திறன் இருக்கும். இவர்கள், நடைமுறை மற்றும் சிறந்த பண மேலாண்மை திறன்களுக்கான பெயர்பெற்றவர்களாக இருப்பர். அவர்களின் அசைக்க முடியாத கவனம் மற்றும் உறுதியுடன் இருப்பதற்கான திறன் ஆகியவை அவர்களின் நிதிச் செழுமைக்கு உதவுகிறது. ரிஷப ராசிக்காரர்களுக்கு சவால்களை சந்திப்பதில் கைதேர்ந்தவர்கள். இதனால் அடுத்த வருடம் பல வகைகளில் பல தொழில்களில் முதலீடு செய்து வருவாய் ஈட்ட உள்ளனர். 

2.மகரம்:

மகர ராசிக்காரர்களும் 2024ஆம் ஆண்டு பணக்காரர்களாக மாற பல வாய்ப்புகள் வந்து சேர உள்ளன. இவர்களிடம், வலுவான லட்சியங்களும் மற்றும் வெற்றிக்கான இடைவிடாத உந்துதல்களும் இருக்கும். இது, இவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளைப் பெற உதவுகிறது. அவர்களின் ஒழுக்கமான இயல்பு செல்வத்தைக் குவிப்பதற்கும் நிதிச் செழிப்பை அடைவதற்கும் வழிவகை செய்கிறது. அவர்களின் உள்ளார்ந்த பொறுப்புணர்வு அவர்கள் தொடர்ந்து கடினமாக உழைக்கும் திறன் கண்டிப்பாக அடுத்த ஆண்டு இவர்களுக்கு செல்வத்தை தேடி தரும். வாழ்வில் என்ன தடை ஏற்பட்டாலும் அதை அப்படியே சமாளித்து மென்மேலும் உயர்வதற்கு பெயர்பெற்றவர்கள், மகர ராசிக்காரர்கள். 

மேலும் படிக்க | அமாவாசை அன்று இரவில் இந்த பரிகாரங்களை செய்யுங்கள்! தோஷம் நீங்கும்!

3.சிம்மம்:

சிம்ம ராசியை உடைய இவர்கள், சிங்கத்தை போலவே அதன் கம்பீரம் மற்றும் தைரியம் போன்ற திறன் உடையவர்களாக இருப்பர். பிறரை கவரக்கூடிய கவர்ச்சிகரமான இயல்பு, மற்றவர்களை இவர் பேச்சை கேட்க வைக்கும் வகையில் இருக்கும். இந்த ராசியை சேர்ந்த பலர், உயர்வான இடத்தில் இருப்பர். தன்னம்பிக்கை, தைரியம் என அனைத்தும் இவர்களுக்குள் இயற்கையாகவே இருக்கும் குணங்கள் ஆகும். அவர்களின் இடைவிடாத முயற்சி மற்றும் முடிவெடுக்கும் திறன் அவர்களின் சாமர்த்தியம் நிதிச் செழுமைக்கு வழி வகுக்கிறது. தங்கள் துறையில் சிறந்து விளங்குவதற்கான ஆர்வம் மற்றும் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பம் பெரும்பாலும் அவர்களுக்கு வெகுமதிகளை பெற வழிவகுக்கிறது.

4.கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் பண ரீதியாக எடுத்து வைக்க இருக்கும் ஒவ்வொரு அடியும் இனி வெற்றிதான்.  அவர்களின் உன்னிப்பாக கவனிக்கும் திறன் மற்றும் விவரங்களுக்கு கவனம் செலுத்துதல் ஆகியவை புத்திசாலித்தனமான முதலீட்டுத் தேர்வுகளைச் செய்ய அவர்களுக்கு உதவும். இவர்களுக்கு பல்வேறு நிதி முயற்சிகளின் அபாயங்கள் மற்றும் அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் தெரியும். எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும் அது குறித்து தீர ஆராய்ந்த பின்னரே எடுப்பர். சிறந்த பட்ஜெட்டை உருவாக்குவது எப்படி என்பதும் இவர்களுக்கு தெரியும். இதனால், கண்டிப்பாக அடுத்த ஆண்டு இவர்களுக்கு பணவரவில் ஜாக்பாட் அடிப்பது உறுதி. 

5.விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள், இந்த ஆண்டு ஏராளமான செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்க வாய்ப்புள்ளது. அவர்களின் உறுதியான மற்றும் வளமான இயல்பினால் விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் நிறைய செல்வங்களைக் குவிப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளது. விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி புத்திசாலித்தனம் இருக்கும். அவர்களின் மூலோபாய சிந்தனை மற்றும் தீவிர உள்ளுணர்வு இலாபகரமான வாய்ப்புகளை அடையாளம் காண அவர்களுக்கு உதவுகிறது. அவர்கள் தங்களுக்கென உயர்ந்த இலக்குகளை அமைத்துக் கொள்கிறார்கள், அவற்றை அடைய அயராது உழைக்க அவர்கள் எப்போதுமே பயப்படுவதில்லை. இதனால், அடுத்த ஆண்டு அவர்களுக்கு செல்வ செழிப்பு மிகுந்த ஆண்டாக இருக்கும். 

மேலும் படிக்க | உச்சம் செல்லும் குரு.. இந்த ராசிகளுக்கு 2024 ஆம் ஆண்டு பொற்காலம்

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News