சுக்கிரன், சூரியன், புதனுடன் குபேரனும் எங்கள் பக்கம் என்கின்றனர் ‘இந்த’ ராசிகள்!

2023 பிப்ரவரி மாதம் கிரகப் பரிமாற்றத்தைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பானதாக இருக்கும், ஏனெனில் இந்த மாதத்தில் 3 முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இதன் தாக்கம், எல்லா ராசிகளிலும் காணப்படும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 26, 2023, 02:58 PM IST
  • கிரகங்களின் நிலை மாற்றத்தால் சிலருக்கு பலன்கள் கிடைத்தாலும், சிலருக்கு பல வகையான நஷ்டம் ஏற்படும்.
  • பிப்ரவரி மாதத்தில் ராசியை மாற்றப் போகும் முக்கிய கிரகங்கள்.
  • கிரகங்களின் ராஜாவான சூரியன் பட்டத்து இளவரசரான புதனை வரவேற்க காத்திருக்கிறார்.
சுக்கிரன், சூரியன், புதனுடன் குபேரனும் எங்கள் பக்கம் என்கின்றனர் ‘இந்த’ ராசிகள்! title=

பிப்ரவரி மாத கிரக பெயர்ச்சிகள்: 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி விரைவில் தொடங்கப் போகிறது. ஜோதிடக் கண்ணோட்டத்தில், இந்த மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில் இந்த மாதத்தில் மூன்று முக்கிய கிரகங்கள் - சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் தங்கள் ராசிகளை மாற்றப் போகிறார்கள்.கிரகங்களின் ராசிகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவற்றின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த கிரகங்களின் நிலை மாற்றத்தால் சிலருக்கு பலன்கள் கிடைக்கும் அதே நேரத்தில், சிலருக்கு பல வகையான நஷ்டமும் ஏற்படும். பிப்ரவரி மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

2023 பிப்ரவரி கிரக பெயர்ச்சிகள்

2023 பிப்ரவரி புதன் பெயர்ச்சி

பிப்ரவரி மாதத்தின் முதல் ராசி மாற்றத்தை கிரகங்களின் அதிபதியான புதன் மேற்கொள்கிறார். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, புதன் கிரகம் பிப்ரவரி 7, 2023 செவ்வாய் அன்று காலை 07:38 மணிக்கு சனிக்கு சொந்தமான மகர ராசியில் நுழைகிறது. கிரகங்களின் ராஜாவான சூரியன் ஏற்கனவே பட்டத்து இளவரசரான புதனை வரவேற்க இங்கு அமர்ந்திருப்பார்.

பிப்ரவரி 27ம் தேதி வரை புதன் மகர ராசியில் அமர்ந்திருப்பார். புதன் மகர ராசியில் நுழைவதால் புதாதித்ய யோகமும் உருவாக்கிறது. இந்த யோகா மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் புதாதித்ய யோகத்தின் தாக்கத்தாலும், மகர ராசியில் புதன் பிரவேசத்தாலும் செல்வச் செழிப்புடன் இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அடைவார்கள். இதனுடன், புதிய வருமான ஆதாரங்களும் திறக்கப்படும். மொத்தத்தில் இவர்களுக்கு அன்னை மகாலட்சுமி மற்றும் குபேரனின் பரிபூரணமான ஆசிகள் கிடைக்கும்.

2023 பிப்ரவரி சூரிய பெயர்ச்சி

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, கிரகங்களின் அரசனான சூரியன், 13 பிப்ரவரி 2023 திங்கட்கிழமை, காலை 09:57 மணிக்கு, சனியின் மூல முக்கோண ராசியான கும்பத்தில் நுழைவார். சூரியனின் மகன் சனி தேவர் ஏற்கனவே அங்கு அமர்ந்திருக்கிறார்.

அத்தகைய சூழ்நிலையில், கும்பத்தில் உள்ள இரண்டு கிரகங்களின் சேர்க்கை பல ராசி அறிகுறிகளுக்கு பாதகமாக இருக்கும். ஏனெனில் ஜோதிட சாஸ்திரப்படி சூரியனுக்கும் அவன் மகன் சனிக்கும் இடையே பகை உணர்வு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சூரியனின் ராசி மாற்றத்தால் பல ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் இல்லையெனில் பல வகையான நஷ்டங்கள் ஏற்படும்.

மேலும் படிக்க | பிப்ரவரி ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு மகாலட்சுமியின் பரிப்பூரண அருள் நிச்சயம்!

பிப்ரவரி 2023 சுக்கிரன் பெயர்ச்சி

செல்வம், வளம் மற்றும் ஆடம்பர சுகங்களுக்குக் காரணமான சுக்கிரன் கிரகம், கும்ப ராசியை விட்டு 15 பிப்ரவரி 2023 புதன்கிழமை இரவு 8.12 மணிக்கு மேல் ராசியில் நுழைகிறார். குரு ஏற்கனவே மீனத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் மீன ராசியில் சுக்கிரன், வியாழன் இணைவதால் மேஷம், ரிஷபம், கடகம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது).

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News