செவ்வாய்ப் பெயர்ச்சியால் உறவுகளின் கசப்பை எதிர்கொள்ளும் 3 ராசிகள்! ஜூன் மாதம் கவனம் தேவை!

Sevvai Peyarchi Bad Effects: ஜூன் முதல் நாளன்று நடைபெறும் மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம், அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அதில் மோசமாக பாதிக்கப்படும் ராசிகள் இவை...

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 20, 2024, 06:44 PM IST
  • செவ்வாய்ப் பெயர்ச்சியால் துன்பப்படப் போகும் ராசிகள்
  • மேஷத்தில் செவ்வாய்
  • ஜூன் முதல் நாளில் ராசி மாறுகிறார் செவ்வாய்
செவ்வாய்ப் பெயர்ச்சியால் உறவுகளின் கசப்பை எதிர்கொள்ளும் 3 ராசிகள்! ஜூன் மாதம் கவனம் தேவை! title=

நவகிரகங்களில் ஒன்பது கிரகங்களின் நகர்வும், அவற்றின் தன்மைக்கு ஏற்ப விரைவாகவோ அல்லது மெதுவாகவோ இருக்கும். அந்ஹ வகையில் செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் நீடிக்கும் என்ற வகையில் ஆண்டுக்கு மொத்தம் ஒன்பது பெயர்ச்சிகள் நடைபெறுகிறது. தற்போது இன்னும் பத்து நாட்களில் செவ்வாய்ப் பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. இருக்கும் இடத்திற்கு ஏற்ப, ஒரு ஜாதகருக்கு செவ்வாய் பலன்களை வழங்குவார்.

செவ்வாய் கிரகம், உங்கள் ஜாதகத்தில் முதல் வீட்டில் சஞ்சரித்தால் முன்முயற்சிகளை தைரியத்துடன் மேற்கொள்வது முதல், உங்களின் மனோபலத்தை அதிகரிப்பது, பிறருக்கு ஊக்கமளிப்பது என உத்வேகத்தைக் கொடுக்கும். அதுவே, உங்கள் ராசியில் 7 அல்லது 8 வது வீட்டில் செவ்வாய் இருந்தால், போகத்தில் ஆசையை ஏற்படுத்துவார் செவ்வாய் பகவான். காதல் எண்ணங்கள், உல்லாசமாக இருப்பது என மனதில் பல்வேறு ஆசைகள் இருக்கும், கற்பனை ஊற்றெடுக்கும். 

அதேபோல, செவ்வாய் உங்கள் ராசியின் 3 அல்லது 6 ஆம் வீட்டில் செஇருந்தால், எதிரிகளை வெற்றி கொள்வது, கடின உழைப்பு, தீர்க்கமான முடிவு எடுக்கும் நிலையை கொடுப்பார். இதுவே, 6 அல்லது 8 ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சாரரித்தால் மனதில் எதிர்மாறான எண்ணங்களை ஏற்படுத்துவார் செவ்வாய். எனவே செவ்வாய்ப் பெயர்ச்சி என்பது ஒருவரின் ஜாதகத்திற்கு ஏற்றாற்போல ஆளுக்கு ஆள் மாறுபடும் என்றாலும், பொதுவான பலன்கள் 12 ராசிகளுக்கும் சொல்லப்படுகிறது. 

தற்போது மீன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பகவான், ஜூன் 1ஆம் தேதியன்று, மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஜூலை 12ம் தேதி வரை மேஷ ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது சில ராசிகளுக்கு வாழ்க்கையில் பின்னடைவு ஏற்படும். பல கஷ்டங்களை எதிர்கொள்ளப்போகும் அந்த துரதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி தெரிந்துக் கொள்வோம். 

மேலும் படிக்க | சனியால் அதிர்ஷ்ட பலன், இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

1. ரிஷபம் (Taurus)

செவ்வாயின் பெயர்ச்சி ஜூன் மாதம் முதல் நாளன்று நடைபெறும்போது ரிஷப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த நட்பு ஒன்று விலகிப் போகும் வாய்ப்புகள் தென்படுகின்றன. இந்த செவ்வாய் பெயர்ச்சி தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும், பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். கூடவே இருந்து குழி பறிக்க நண்பர்களே காத்துக் கொண்டிருக்கலாம். தொழில் ரீதியாக மட்டுமல்ல, உறவினர்களிடமும் கவனமாக நடந்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க | Astro: கடன் தொல்லை தீர, வருமானம் பெருக... எளிய ‘செம்பருத்தி பூ’ பரிகாரங்கள்!

2.  மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் மன உளைச்சல் இருந்து ஏற்படலாம். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவை தள்ளிப் போக வாய்ப்புள்ளது. ஊழியர்களின் பிரச்சனை தொழில் செய்பவர்களுக்கு பெரியதாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான அதிருப்தியை சந்திக்க நேரிடலாம். 

3. சிம்மம் (LEO)

செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களின் பொருளாதார நிலை சற்று ஆட்டம் காணும். செலவுகள் அதிகரிக்கலாம், பணியிடத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். காரியத்தடை கவலையைக் கொடுக்கும். குடும்பத்தில் மனக்குழப்பம் தொடரும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்காது. முதலீடுகளில் இருந்து கிடைக்கும் பலனுக்கு ஆசைப்பட்டு அதிகமாக செய்தால், அது சுமையை ஏற்படுத்திவிடும்.

இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி பலன்கள் பொதுவானவை. அவரவர் தனிப்பட்ட ஜாதகத்திற்கு ஏற்றவாறு பலன்கள் மாறும். இருந்தாலும், செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான முருகக் கடவுளை சரணடைந்தால் செவ்வாய்ப் பெயர்ச்சியின் தாக்கத்தில் இருந்து நிவர்த்தி கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தமிழ் மாதங்களுக்கு பெயர் கொடுக்கும் சூரியனின் நாமங்கள்! சூரியப் பெயர்ச்சி தரும் 12 பெயர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News