சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கி 140 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு வரவேற்றுள்ளது.
இந்த டூடுள் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் விளையாடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர் பந்து வீசுவது போன்றும் அதனை பேட்ஸ்மேன் அடிப்பதும், பீல்டர்கள் அதனை பிடிக்க முயல்வது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் 1877-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதின. மார்ச் 15 முதல் மார்ச் 19 வரை இந்த டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.