183 ரன்களுக்கு சுருண்டது இலங்கை!

Last Updated : Aug 5, 2017, 12:15 PM IST
183 ரன்களுக்கு சுருண்டது இலங்கை! title=

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் மூன்றாம்நாள் ஆட்டம் காலை 10 மணி அளவில் துவங்கியது

இலங்கை அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்தில் இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் இரண்டாவது போட்டி ஜூலை 3 ஆம் தேதி காலை கொழும்புவில் துவங்கியது. டாஸ் வென்று இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 158 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அதன் பின் தனது முதல் இன்னிங்க்சை துவங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 50/2 என்ற நிலையில் இருந்தது.

இந்நிலையில் இன்று இரண்டாவது டெஸ்டின் மூன்றாம்நாள் ஆட்டம் துவங்கியது. துவங்கியது முதலே இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரியா தொடங்கியது. இந்நிலையில் தற்போது இலங்கை தனது முதல் இன்னிங்க்சில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 183 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது.

தற்போதய நிலவரப்படி இலங்கை அணி 49.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்துள்ளது. எனவே இந்திய தற்போது 439 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Trending News