இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட்: இந்தியா 333 ரன் வித்யாசத்தில் தோல்வி

Last Updated : Feb 25, 2017, 03:21 PM IST
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட்: இந்தியா 333 ரன் வித்யாசத்தில் தோல்வி title=

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

புனேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 94.5 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்தது. பிறகு ஆடிய இந்திய அணி, 40.1 ஓவர்களில் 105 ரன் எடுத்து. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. ஸ்டீவன் ஸ்மித் 59, மிட்செல் மார்ஷ் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று மார்ஷ் 31 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சிலும் வேட் 20 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தார்கள். ஆஸி. கேப்டன் ஸ்மித், 187 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இது அவருடைய 18-வது டெஸ்ட் சதமாகும். இந்தியாவில் அவர் எடுக்கும் முதல் சதம்.
இன்று மார்ஷ் 31 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சிலும் வேட் 20 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தார்கள். 

ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 87 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணிக்கு 441 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை மட்டும் இந்திய அணி சாதித்துவிட்டால் அது உலக சாதனையாக இருக்கும் என்கிற நிலை இருந்தது. 2003-ல் செயிண்ட் ஜான்ஸ்-ல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதே இன்று வரை உலக சாதனையாக உள்ளது.

ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 87 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணிக்கு 441 ரன்கள் இலக்கு கொதுத்தது.

இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 33.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. 

Trending News