5வது டெஸ்ட்: 3-வது நாள் ஆட்ட முடிவில் 391/4

இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்டில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல், 199 ரன்களில் அவுட்டாகி, இரட்டை சத வாய்ப்பை தவற விட்டர்.

Last Updated : Dec 18, 2016, 06:05 PM IST
5வது டெஸ்ட்: 3-வது நாள் ஆட்ட முடிவில் 391/4 title=

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்டில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல், 199 ரன்களில் அவுட்டாகி, இரட்டை சத வாய்ப்பை தவற விட்டர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல், நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 3 - 0 என தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து, 477 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 

இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி ,60 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது லோகேஷ் ராகுல், பார்த்திவ் ஜோடி நிலையான ஆட்டத்தை தொடர்ந்தது. அரை சதம் கடந்த பார்த்திவ், 71 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா 16 ரன் எடுத்து அவுட் ஆனார். கோஹ்லி, 15 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் டெஸ்டில் 4-வது சதம் அடித்தார். பின் வந்த கருண் நாயர் அரை சதம் கடந்தார். 

ராகுல் 199 ரன்களில் ரஷித் 'சுழலில்' சிக்கி, இரட்டை சத வாய்ப்பை பறிகொடுத்து வெளியேறினார். ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 391 ரன்கள் எடுத்து, 86 ரன்கள் பின்தங்கி இருந்தது. கருண் நாயர் 71, முரளி விஜய் 17 அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணி இன்று மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 108 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 391 ரன்களை எடுத்து உள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியா 6 விக்கெட்கள் மீதம் இருக்க 86 ரன்கள் பின்தங்கி உள்ளது. 

Trending News