இதுவரை ஐபிஎல்லில் அடிக்கப்பட்ட சிக்ஸர்கள் எத்தனை தெரியுமா?

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 885 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 17, 2022, 06:34 PM IST
  • 885 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன
  • நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனை
  • 1000 சிக்ஸர்கள் அடிக்கப்படுமென எதிர்பார்ப்பு
இதுவரை ஐபிஎல்லில் அடிக்கப்பட்ட சிக்ஸர்கள் எத்தனை தெரியுமா? title=

ஐபிஎல் 2022 தொடரில் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோசமான தோல்விகளைச் சந்தித்து நடப்பு தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியும் வெளியேறியிருக்கிறது.

இந்நிலையில், இந்த சீசனில் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 885 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2018 ஐபிஎல் தொடரில் 872 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்ச சிக்ஸர்களாக இருந்தன. 

Russell

அந்தச் சாதனையானது நடப்பு ஐபிஎல் தொடரில் முறியடிக்கப்பட்டிருக்கிறது. லீக் ஆட்டங்கள் முடிய ஒரு வாரம் இருப்பதாலும், அதன் பிறகு ப்ளே ஆஃப் சுற்றுகள் இருப்பதாலும் 1000 சிக்ஸ்ர்கள் அடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Liam Livingstone

இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களைப் பொறுத்தவரையில், ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் முதலிடத்தில் இருக்கிறார். (37 சிக்ஸர்கள்). அவருக்கு அடுத்ததாக கொல்கத்தா அணிக்கு விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஆண்ட்ரூ ரஸலும் (32 சிக்ஸர்கள்),மூன்றாவது இடத்தில் பஞ்சாப் அணிக்கு விளையாடும் லிவிங்ஸ்டோன் (29 சிக்ஸ்ர்கள்) இருக்கின்றனர்.

மேலும் படிக்க | RCB அளித்த கவுரவத்தால் உருகும் கெயில், டிவில்லியர்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News