இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் மீண்டும் மேத்திவ்ஸ்!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளயாடும் 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக ஆங்கிலோ மேத்திவ்ஸ் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Jul 24, 2018, 05:03 PM IST
இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் மீண்டும் மேத்திவ்ஸ்! title=

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளயாடும் 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக ஆங்கிலோ மேத்திவ்ஸ் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இலங்கை டெஸ்ட் தொடரை வென்றது.

இதனையடுத்து வரும் ஜூலை 29-ஆம் நாள் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டிகள் தொடர் துவங்குகிறது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் புதுவீரராக சுழற்பந்து வீச்சாளர் பிரதாப் ஜெயசூரியா சேர்க்கப்பட்டுள்ளார். 

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தனுஷ்கா குனத்திலகா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாலும், பந்து சேதப்படுடுத்திய வழக்கில் தினேஷ் சண்டிமல் இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாலும் இவர்கள் இருவருக்கும் இந்த ஒருநாள் போட்டி தொடரில் இடமளிக்கப்படவில்லை.

இதனையடுத்து விளையாடவிருக்கும் அணிக்கு ஆங்கிலோ மேத்திவ்ஸ் அணித்தலைவராக இருப்பார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஒருநாள் தொடர் அணி வீரர் பட்டியல்...
ஆங்கிலோ மேத்திவ்ஸ், தசுன் ஷானுக்கா, குஷல் ஜனித் பெராரா, தனஜெயன் டி சில்வா, உபுல் தரங்கா, குஷல் மென்டீஸ், தஹிசரா பெராரா, நிரோஷன் டிக்வெல்லா, சுரங்கா லக்மல், லஹிரு குமாரா, குஷன் ரஜித்தா, அகிலா தனசெயிழன், பிரதாப் ஜெயசூரியா, லக்ஷன் சன்டாக்கன், சிஹேன் ஜெயசூரியா.

Trending News