உலக கோப்பை டி20 இந்திய அணியில் தோனி-க்கு வாய்ப்பு குறைவு...

IPL 2020-ல் தோனியின் செயல்பாடே, உலக கோப்பை டி20 இந்திய அணியில் அவர் இடம்பெறுவாறா? என்பதை தீர்மானிக்கும் என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்!

Written by - Mukesh M | Last Updated : Dec 31, 2019, 12:49 PM IST
உலக கோப்பை டி20 இந்திய அணியில் தோனி-க்கு வாய்ப்பு குறைவு... title=

IPL 2020-ல் தோனியின் செயல்பாடே, உலக கோப்பை டி20 இந்திய அணியில் அவர் இடம்பெறுவாறா? என்பதை தீர்மானிக்கும் என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்!

2020 இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) மூத்த விக்கெட் கீப்பர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பொறுத்து, இந்திய அணியுடன் MS தோனியின் எதிர்காலம் மற்றும் 2020 உலககோப்பை டி20 போட்டிக்காக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் அணியில் அவரது இருப்பு தீர்மானிக்கப்படும் என அனில் கும்ப்ளே கருதுகிறார்.

இதுகுறித்து அவர் CricketNext-டம் தெரிவிக்கையில்., "IPL 2020 தொடரில் MS தோனி எவ்வாறு செயல்படுகிறார் என்பது பொறுத்து, உலகக் கோப்பைக்கு அவரது சேவைகள் தேவை என்று இந்திய அணி நம்பினால், அங்கிருந்து அவர் அணியின் ஒரு அங்கமாக இருக்கலாம். ஆனால் உறுதியான ஒரு முடிவினை எடுக்க நாம் காத்திருக்க வேண்டியுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே, இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் டோனியின் முன்னோடி ஆவார். தோனியின் உலக கோப்பை அணி இருப்பு குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்., அணியில் ஆல்ரவுண்டர்களின் இருப்பு பார்ப்பதற்கு பதிலாக சிறப்பு விக்கெட் எடுப்பவர்களை நிர்வாகம் ஆராய வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். கும்ப்ளேவின் இந்த கருத்து சிறப்பு பேட்ஸ்மேனான தோனியின் இருப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்தாய் பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்., "அணியில் நிச்சயமாக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர்கள் தேவை என்று நான் நம்புகிறேன், குல்தீப் (யாதவ்) மற்றும் (யுஸ்வேந்திர) சாஹல் போன்ற ஒருவர் எனது பார்வையில் அதன் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். டி20 போட்டிகள் மாலை-இரவு நேரங்களில் நடப்பதால் பந்து ஈரமாகிவிடுவது இயல்பான விஷயம். இந்த சமையங்களில் இரண்டு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது சரியே" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"நாம் விக்கெட் எடுக்கும் விருப்பங்களைத் தேடத் தொடங்குவது மிகவும் முக்கியம். இதன் பொருள் என்னவென்றால், ஆல்-ரவுண்டர்களைப் பார்ப்பதை விட, விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று நாம் நம்பும் வேகமான பந்து வீச்சாளர்களை நாம் அணியில் கொண்டுவர வேண்டும். அவ்வாறான வீரர்களையே அணி தேடுகிறது; இது முக்கியமான அம்சம் என்று நான் நினைக்கிறேன்." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read - சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள் நிறைவு செய்தார் MS தோனி... 

ஆஸ்திரேலிய நிலைமைகளில் ஒரு வீரர் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியும் என்பதும் தேர்வு செயல்முறைக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்றும் கும்ப்ளே கூறினார்.

"ஆஸ்திரேலிய நிலைமைகளில் யார் சிறப்பாக செயல்படுவார்கள், விக்கெட்டுகளை எடுக்கும் திறனைக் கொண்ட பந்து வீச்சாளர் யார் என்பது பற்றி இந்தியா சிந்திக்கத் தொடங்குவது மிகவும் முக்கியம், ஏனென்றால் ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் எதிரணியினருக்கு மிகுந்த அழுத்தம் கொடுக்ககூடியவை" எனவும் அவர் குறிப்பிடுடள்ளார்.

மூத்த வீரர் அனில் கும்ப்ளேவின் இந்த கருத்துக்கள் தற்போது தோனியின் உலக கோப்பை அணி இருப்பினை சத்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ICC கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 தொடரின் அரையிறுதி போட்டியில் வெளியேறியதில் இருந்து தோனி அணிக்காக களத்தில் இறங்காமல் ஒதுங்கி இருக்கிறார்.  எனினும் அவர் மீண்டும் வருவார், மீண்டு வருவார் என ரசிகர்களை நம்பிக்கையில் உள்ளனர். அதற்கான சரியான நேரத்தினையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவ்வாறான ஒரு அறிவிப்பு வந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Trending News