ஆசியக்கோப்பை 2022; திரும்பும் வரலாறு; பதிலடி கொடுக்குமா இந்தியா? தினேஷ் கார்த்திக்கிற்கு ஜாக்பாட்

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 28, 2022, 08:31 PM IST
  • டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்
  • ரிஷப் பன்டிற்கு ஓய்வு - தினேஷ் கார்த்திகிற்கு வாய்ப்பு
  • 100வது போட்டியில் களமிறங்கிய கோலி
ஆசியக்கோப்பை 2022; திரும்பும் வரலாறு; பதிலடி கொடுக்குமா இந்தியா? தினேஷ் கார்த்திக்கிற்கு ஜாக்பாட் title=

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இதே மைதானத்தில் நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது முதலில் களமிறங்கிய அணி ஏறத்தாழ 150 ரன்கள் மட்டுமே விளாச, பின்னர் சேஸிங் செய்த பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது. 

அந்த வரலாறு இப்போது திரும்பியிருக்கிறது என்று கூறலாம். அதாவது இன்றைய போட்டியில் டாஸ் வெற்றி பெற்றிருப்பதால், அந்தப் போட்டியில் பாகிஸ்தான் சேஸிங் செய்தது போல் இந்திய அணியும் சேஸிங் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கும் பிளேயிங் லெவன் பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிஷப் பன்டுக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் சர்பிரைஸான முடிவாக பார்க்கப்படுகிறது. அடுத்தது, சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யுஸ்வேந்திர சாஹல் மட்டுமே அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஐபிஎல் தொடரில் ஜொலித்த அவேஷ்கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. இந்த தொடரில் சிறப்பாக விளையாடினால் அவர்களுக்கு எதிர்வரும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், விராட் கோலி இந்திய அணிக்காக 100வது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கியிருக்கிறார். ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சர்வதேச அளவில் 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.    

இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா(கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக்(வி.கீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங் 

மேலும் படிக்க |  ஆசியக்கோப்பையில் இந்திய அணியை அச்சுறுத்தும் அணிகள்

மேலும் படிக்க | ‘ஆமா நான் மென்ட்டலி வீக்கா இருக்கேன்’ - உண்மையை உடைத்த கோலி; குவியும் பாராட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News