45 நாடுகள், 10,000 பேர் பங்குபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்

இன்று முதல் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலாமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் 45 நாடுகள், 10,000 பேர் பங்கேற்கின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2018, 12:33 PM IST
45 நாடுகள், 10,000 பேர் பங்குபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம் title=

உலகின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. இது 18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இம்முறை இந்தோனேசியா நடத்துகிறது. இந்த விளையாட்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக ஆசிய விளையாட்டுப் போட்டி (17வது முறை) தென் கொரியாவில் நடைபெற்றது.

1949 பிப்ரவரி 13 ஆம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்ற அமைப்பு உருவாக்கபட்டது. 1950 ஆம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டி நியூ டெல்லியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியா முதல் ஆசிய விளையாட்டு போட்டி முதன் முதலில் டெல்லியில் நடத்தியது. அதன் பிறகு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு முறை இந்த போட்டி நடத்தபட்டு வருகிறது. இதுவரை இந்தியா இரண்டு முறை ஆசியா விளையாட்டுப் போட்டியை நடத்தி உள்ளது. முதல் போட்டி 1951 ஆம் ஆண்டும், இரண்டாவது போட்டி 1982 ஆம் ஆண்டும் நடத்தியது. இதுவரை 17 முறை நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளை அதிக முறையாக நான்கு தடவை தாய்லாந்து தான் நடத்தி உள்ளது. இம்முறை இரண்டாவது முறையாக போட்டியை நடத்துகிறது இந்தோனேசியா. ஏற்கனவே 1962 ஆம் ஆண்டு நடத்தி உள்ளது.

இந்தோனேசியா தலைநகரம் ஜகார்த்தாவில் நாளை தொடங்குகிறது. போட்டி நடத்தும் முன்பு துவக்க விழா நடைபெறுகிறது. இம்முறை ஆசிய விளையாட்டு போட்டியில் 45 நாடுகள் பங்கேற்கவுள்ளன. மொத்தம் 10,000 பேர் கலந்துக்கொள்ளும் போட்டியில், இந்தியா சார்பாக 541 பேர் விளையாட உள்ளனர். 18_வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 40 விதமான விளையாட்டுகள் நடைபெறுகிறது. 

ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் தொடங்கும் ஆசியா விளையாட்டு போட்டி அடுத்த மாதம் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Trending News