ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பையை வென்ற கையுடன் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியுடன் 3 நாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டி நேற்று (நவ. 17) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களை விளையாடி, ஆஸ்திரேலிய அணிக்கு 288 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இங்கிலாந்து பேட்டிங்கில் மலான் 134 ரன்களை குவித்திருந்தார்.
இருப்பினும், தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியாவில் டேவிட் வார்னர் 86, ஸ்டீவ் ஸ்மித் 80, ட்ராவிஸ் ஹெட் 69 ஆகியோர் சிறப்பாக விளையாட, 46.5 ஓவர்களில் இலக்கை அடைந்தது. இங்கிலாந்து அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், ஆஸ்திரேலியா தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும், சதம் அடித்த டேவிட் மலான் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கின் போது, 5ஆவது வீரராக கிரீன் களமிறங்கினார். அவர் 7 ரன்களை எடுத்திருந்தபோது, லியம் டாவ்சன் பந்துவீசினார். அப்போது, ரெண்டு மூன்று பந்துகளை ரன்னடிக்காமல் இருந்து, அடுத்த பந்தை இறங்கிவந்து அடிக்க முயன்றபோது, அந்த ஷாட்டும் தவறிவிட்டது.
It was good of @josbuttler to remind Cam Green about the upcoming IPL auction
Textbook stuff this pic.twitter.com/bkLbdXmUQ4
— Cricket on BT Sport (@btsportcricket) November 17, 2022
அதற்கு கேப்டனும், கீப்பருமான ஜாஸ் பட்லர், 'ரொம்ப கழித்து ஒருவர் ஷாட் அடிக்க போகிறார்' என கிரீனை குறிப்பிட்டு நகைத்தார். அப்படியே டாவ்சனை ஊக்கவித்தபடியே, 'பெரிய ஏலம் ஒன்று நடைபெற உள்ளது, டாவ்சன்' எனவும் கிரீனை நகைத்தார்.
அதாவது, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் வீரர்களில், கிரீனும் ஒருவர் என்பதால் பட்லர் இவ்வாறு அவரை கிண்டலடித்துள்ளார். பட்லரின் கிண்டல்கள் அனைத்திற்கும் கிரீன் புன்சிரிப்புடனே இருந்தார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 20 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.
ஐபிஎல் மினி ஏலம் அடுத்த மாதம் 23ஆம் தேதி கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலையும், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலையும் கடந்த நவ. 15ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ