ரஃபேல் நடால் மற்றும் மெட்வெடேவ் இடையேயான ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டி மெல்பேர்னில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. முதல் சுற்று முடிவடைந்து 2வது சுற்று சென்றுகொண்டிருக்கும்போது மர்ம நபர் மைதானத்துக்குள் குதித்தார். அப்போது பிரேக் பாய்ண்டை காப்பாற்றுவதற்கு போராடிக் கொண்டிருந்த நடால் 5க்கு 4 என முன்னிலையில் இருந்தார்.
ALSO READ | ’தடை.. அதை உடை..’ வலிகளை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டிய நடால்
மர்ம நபர் உள்ளே குதித்ததும், அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக ஓடிச்சென்று அவரை பிடித்தனர். அந்த நபரின் கையில் பதாகை ஒன்று இருந்தது. அதில் அகதிகள் தொடர்பான கோரிக்கையை அவர் எழுதியிருந்தார். அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இத்தகைய போராட்டத்தை முன்னெடுத்த அவரை, பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இதனால், சிறிதுநேரம் போட்டி தடைபட்டு, மைதானத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
Some bozo just jumped out of the stands onto the court (probably about three meters), got dragged out.#AusOpen pic.twitter.com/u4xzjTaIEf
— Ben Rothenberg (@BenRothenberg) January 30, 2022
முன்னதாக, இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் மெத்வதேவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, செட்டைக் கைப்பற்றினார். அந்த செட்டை 6க்கு இரண்டு என்ற புள்ளிகள் கணக்கில் நடால் இழந்தார். ஆனால், இரண்டாவது சுற்றில் நடால் மீண்டு வந்து சிறப்பாக ஆடினார். 2க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் நடால் முன்னிலையில் இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது.
ALSO READ | டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஓய்வு குறித்து முக்கிய அறிவிப்பு!
ஆஸ்திரேலிய ஓபனில் தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடால், அரையிறுதிப்போட்டியில் இத்தாலியின் பெர்டினியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மெத்வதேவ் கிரீஸின் சிட்ஸிபாஸை தோற்கடித்தார். இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை நடால் மற்றும் பெடரர் வென்றுள்ளனர். இந்த பட்டத்தை நடால் வென்றால் 21 கிராண்ட்ஸ்லாம்களை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR