’தடை.. அதை உடை..’ வலிகளை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டிய நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ரபேல் நடால், இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 28, 2022, 01:33 PM IST
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிப்போட்டி
  • இத்தாலி வீரரை வீழ்த்தி நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
  • ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி
 ’தடை.. அதை உடை..’ வலிகளை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டிய நடால் title=

கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் அரையிறுதிப்போட்டி மெல்பேர்ன் நகரில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரமான ரபேல் நடால், இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெர்ட்டினியை எதிர்கொண்டார். போட்டியின் முதல் செட் முதலே நடால் ஆதிக்கம் செலுத்தினார்.

ALSO READ | சென்னை வந்துள்ள தோனி! காரணம் இதுதான்!

முதல் 2 செட்களை நடால் கைப்பற்றிய நிலையில், 3வது செட்டை பெர்டினி கைப்பற்றினார். ஆனால், 4வது செட்டில் மீண்டு வந்த நடால் அந்த செட்டைக் கைப்பற்றி, வெற்றியை உறுதி செய்தார். முடிவில் 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் 6வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 2வது அரையிறுதிப் போட்டியில் மெட்வெடேவ் மற்றும் சிட்சிபாஸ் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறுபவர்கள் நடாலை எதிர்கொள்ள உள்ளனர். போட்டிக்குப் பிறகு கண்ணீர் மல்க பேசிய நடால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலில் ஏற்பட்ட காயம் மற்றும் கொரோனா ஆகியவை காணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பங்கேற்பது சந்தேகமாக இருந்ததாக தெரிவித்தார். ஆனால், அந்த தடைகளை உடைத்து இப்போது இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இப்போதைய முழு கவனமும் இறுதிப்போட்டி மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

ALSO READ | Team India: இந்திய டெஸ்ட் கேப்டன் பதவி இந்த 5 பேரில் யாருக்கு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News