வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி முல்தானில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், 107 பந்துகளை எதிர்கொண்டு 103 ரன்கள் விளாசினார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் பாபர் அசாம் விளாசிய சதம், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் அடித்த 17வது சதமாக பதிவானது. மேலும், விராட் கோலியின் சாதனை ஒன்றையும் அவர் முறியடித்தார்.
இதுவரை ஆயிரம் ரன்களை விரைவாக எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலியின் பெயர் இருந்தது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த பாபர் அசாம் கேப்டனாக ஆயிரம் ரன்களை விரைவாக எடுத்திருந்த கோலியின் சாதனையை முறியடித்து தன்னுடைய பெயரை எழுதிக் கொண்டார். விராட் கோலி 17 போட்டிகளில் இந்த சாதனையைப் படைத்திருந்தார். ஆனால், பாபர் அசாம் வெறும் 13 போட்டிகளில் கோலியின் சாதனையை முறியடித்தார்.
மேலும் படிக்க | INDvsSA: கே.எல்.ராகுல் திடீர் விலகல் - கேப்டனாகப்போகும் இளம் வீரர்
27 வயதான பாபர் அசாம், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 3 சதங்களை அடித்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 3 சதங்களை அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையும் அவர் வசமானது. இந்த போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக 2 சதங்களை பாபர் அசாம் விளாசியிருந்தார். போட்டி முடிந்தவுடன் சிறந்த ஆட்டக்காரர் என்ற விருதை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த விருதை பெருந்தன்மையாக குஷ்தில் ஷாவுக்கு கொடுத்தார் அவர். குஷ்தில் ஷா 23 பந்துகளை எதிர்கொண்டு 41 ரன்களை விளாசி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதனை கவுரவிக்கும் வகையில் ஒரு கேப்டனாக பாபர் அசாம் இதனை செய்தார். அவரின் இந்த பெருந்தன்மையை வீரர்கள் உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
மேலும் படிக்க | இந்திய அணியின் கேப்டனுக்கு இர்பான் சொல்லும் வீரர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR