INDvsSA: கே.எல்.ராகுல் திடீர் விலகல் - கேப்டனாகப்போகும் இளம் வீரர்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இருந்து கேப்டன் கே.எல்.ராகுல் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 8, 2022, 07:37 PM IST
  • தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து ராகுல் விலகல்
  • பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதாக தகவல்
  • ரிஷப் பன்ட் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு
INDvsSA: கே.எல்.ராகுல் திடீர் விலகல் - கேப்டனாகப்போகும் இளம் வீரர் title=

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. ஜூன் 9 ஆம் தேதி முதல் தொடங்கும் இப்போட்டிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டிருந்தார். மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியினர் டெல்லியில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். 

மேலும் படிக்க | இந்திய வீரரை வம்புக்கு இழுத்த ஆஸ்திரேலிய வீரர்

கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் உள்ளிட்டோர் இந்த பயிற்சியில் பங்கேற்றிருந்தனர். இப்போது திடீர் பின்னடைவாக கே.எல்.ராகுல் காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து முழுமையாக விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக கே.எல்.ராகுல் விலகலை அறிவிக்கவில்லை. ஒருவேளை கே.எல்.ராகுல் தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து விலகினால் இளம் வீரரான ரிஷப் பன்ட் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.

ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பன்ட், தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக பொறுபேற்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அதேநேரத்தில் ஐபிஎல் தொடரில் முதன்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்று, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியாவின் பெயரும் கேப்டன்ஷிப் பரிசீலனையில் உள்ளது.

ஆனால், தொடருக்கான இந்திய அணி அறிவிக்கும்போதே துணைக் கேப்டனாக ரிஷப் பன்ட் அறிவிக்கப்பட்டிருந்ததால், ராகுல் விலகும்பட்சத்தில் அவரே கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தெரிகிறது. கே.எல்.ராகுல் விலகுவதால், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கப்போகும் வீரர் யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | சாதனை பெண்! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் Mithali Raj

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News