உலக பேட்மிண்டன் போட்டி: சாய்னா நெவால் 3வது சுற்றுக்கு தகுதி

24_வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷி தொடரில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 1, 2018, 01:01 PM IST
உலக பேட்மிண்டன் போட்டி: சாய்னா நெவால் 3வது சுற்றுக்கு தகுதி title=

சீனாவின் நான்ஜின் நகரில் 24_வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடி வரும் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் சாய்னா நெவால் ஆகியோருக்கு முதல் சுற்றில் பை அளிக்கப்பட்டதால், நேற்று இரண்டாவது சுற்றில் விளையாடினார் சாய்னா நெவால். உலக தரவரிசையில் 10_வது இடத்தில் இருக்கும் சாய்னா நேவால், துருக்கி சேர்ந்த 72-ம் நிலையில் இருக்கும் அலியே டெமிர்பாக்கை எதிர்க்கொண்டார். இந்த சுற்றில் 21-17, 21-8 என்ற செட்களில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார் சாய்னா நேவால்.

இன்று நடைபெற்ற மூன்றாவது சுற்றில் தாய்லாந்து வீராங்கனை ராட்சனோக் இன்டானோனை எதிர்கொள்கிறார். அதேபோல மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தனது இரண்டாவது சுற்றில் இந்தோனேசியாவை சேர்ந்த பிட்ரியானியை எதிர்கொள்கிறார்.

 

Trending News