BadmintonAsia: காலிறுதியில் வெளியேறியது இந்திய மகளிர் அணி!

ஆசிய பேட்மின்டன் காலிறுதியில் இந்திய பெண்கள் அணி, 1-3 என்ற கணக்கில் இந்தோனேஷியாவிடம் தோல்வியடைந்தது!

Last Updated : Feb 9, 2018, 10:00 PM IST
BadmintonAsia: காலிறுதியில் வெளியேறியது இந்திய மகளிர் அணி! title=

ஆசிய பேட்மின்டன் காலிறுதியில் இந்திய பெண்கள் அணி, 1-3 என்ற கணக்கில் இந்தோனேஷியாவிடம் தோல்வியடைந்தது!

ஆசிய அணிகளுக்கான ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவு லீக் சுற்றில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, காலிறுதியில் இந்தோனேஷியாவை சந்தித்தது.

காலிறுதியில் முதல் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, பிட்ரியானியை எதிர்கொன்டார். இப்போட்டியில் பிவி சிந்து 21-13 24-22 என்ற நேர் செட் கணக்கில் பிட்ரியானியை வீழ்த்தினார். 

எனினும் அடுத்து நடைப்பெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி, 21-5 21-16 என்ற கணக்கில் கிரேசியா, ரகாயு ஜோடியிடம் வீழ்ந்தது.

அதேப்போல் இரண்டாவது ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் கிருஷ்ண பிரியா, ஹன்னாவிடம் 21-8 21-15 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். 

அடுத்து நடந்த மற்றொரு இரட்டையர் போட்டியில் இந்திய அணியின் சிந்து, கோர்படே ஜோடி, இந்தோனேஷியாவின் அங்கியா ஷிட்டா, மஹாதெய் இஸ்ட்ரெயினியிடம் 21-9 21-18 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

இதனால் இந்திய மகளிர் அணி 1-3 என்ற கணக்கில் காலியிறுதியில் தோல்வியுற்று ஆசிய கோப்பை கனவு கலைத்தது!

Trending News