ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 262 ரன்கள் குவித்துள்ளது!
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 31-வது லீக் ஆட்டம் சௌத்தம்டன் ரோஸ் பவுள் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.
இப்போட்டியல் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணியின் துவக்க வீரர்கள் லிட்டன் தாஸ் 16(17), தமிம் இக்பால் 36(53) ரன்களில் வெளியேறினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஷகிப் உல் ஹாசன் 51(69) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். இவருக்கு துணையாக முஷ்பிகுர் ரஹீம் அதிரடியாக விளையாடி 83(87) ரன்கள் குவித்து வெளியேறினார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹூமான் 3 விக்கெட் வீழ்த்தினார். குல்பதின் நபி 2 விக்கெட் வீழ்த்தினார்.
Bangladesh finish their 50 overs on 262/7.
Mushfiqur Rahim top-scored for his side with 83 while Mujeeb Ur Rahman starred for Afghanistan with 3/39 from his 10 overs. #BANvAFG | #CWC19 pic.twitter.com/Rvfai51m9J
— ICC (@ICC) June 24, 2019
இதனையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.