ஸ்டீவன் சுமித், ஹேன்ட்ஸ்கோம்ப் புகாரை பிசிசிஐ வாபஸ்

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் எதிராக வந்த புகாரை பிசிசிஐ வாபஸ் பெற்றது

Last Updated : Mar 10, 2017, 10:58 AM IST
ஸ்டீவன் சுமித், ஹேன்ட்ஸ்கோம்ப் புகாரை பிசிசிஐ வாபஸ்  title=

புதுடெல்லி: ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் எதிராக வந்த புகாரை பிசிசிஐ வாபஸ் பெற்றது

இந்தியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், நடுவர் வழங்கிய எல்.பி.டபிள்யூ.வை எதிர்த்து பெவிலியனில் இருந்த தங்களது வீரர்களின் உதவியை நாடியது பலத்த சர்ச்சையாக வெடித்தது.

டி.ஆர்.எஸ். முறைப்படி களத்தில் இருக்கும் வீரர்களிடம் மட்டுமே யோசனை கேட்க முடியும். அதை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சுமித்தை தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் அவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்து விட்டது. இந்த பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.க்கு நேற்று அதிகாரபூர்வமாக புகார் அளித்துள்ளது.  

இந்நிலையில், ஸ்மித் மற்றும் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் மீது அளித்த புகாரை இந்திய கிரிக்கெட் வாரியம்  திரும்ப பெற்றுள்ளது. பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சிஈஓ ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

Trending News