தமிழக அணியுடன் மோதும் தமிழக வீரரின் அணி; வெற்றி யாருக்கு?

IPL 2019 தொடரின் 23-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

Last Updated : Apr 9, 2019, 03:52 PM IST
தமிழக அணியுடன் மோதும் தமிழக வீரரின் அணி; வெற்றி யாருக்கு?

IPL 2019 தொடரின் 23-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

IPL 2019 தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கொல்கத்தா க்நைட் ரைடர்ஸ் அணியும், இரண்டாம் இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

முன்னதாக கடந்த 6-ஆம் நாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி 160 ரன்கள் குவித்தது. இதன் மூலம் சென்னை அணி சுழற்பந்து வீச்சு, வேகபந்து வீச்சு என இரண்டிலும் அதிரடி ஆட்டத்தை காண்பிக்கும் என நிரூபித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்களை சென்னை அணி சமாளித்து 160-க்கும் மேல் ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணியின் அம்பத்தி ராயுடு சமீப காலமாக மோசமான விளையாட்டை வெளிப்படுத்தி வரும் நிலையில் ராயுடுவின் பேட்டிங் வரிசை 4-ஆம் இடத்திற்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு பதிலாக டூப்ளசிஸ் துவக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது IPL முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ஹாரி குருணி இன்றைய போட்டியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News