Watch Video: ’இது என்ன புது அவதாரம்?’ பந்துவீச்சாளராக மாறிய புஜாரா

New Spinner In Cheteshwar Pujara: இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வீரரான புஜரா, பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 14, 2022, 02:34 PM IST
  • சசெக்ஸ் அணிக்காக விளையாடும் புஜாரா
  • பந்துவீச்சாளராக புதிய அவதாரம் எடுத்தார்
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ
Watch Video: ’இது என்ன புது அவதாரம்?’ பந்துவீச்சாளராக மாறிய புஜாரா title=

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் டிராவிட்டுக்குப் பிறகு தடுப்புச் சுவராக பார்க்கப்படுவர் புஜாரா. ஆஸ்திரேலியா உள்ளிட்ட முன்னணி அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிகளுக்கு உதவியிருக்கும் அவர், அண்மைக்காலமாக பார்ம் இல்லாமல் இருந்தார். இதனால், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படும் சூழல் உருவானது. உடனே இங்கிலாந்து பறந்த அவர், கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி சதம் மற்றும் இரட்டை சதம் விளாசி இந்திய தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். 

மேலும் படிக்க | வைரலாகும் பும்ராவின் மனைவி வீடியோ

தற்போது இந்திய அணி, 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு திரும்பியுள்ளதால் புஜாரா மீண்டும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். பேட்ஸ்மேனாக மட்டுமே இதுவரை பார்க்கப்பட்ட அவர், தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் பந்துவீச்சாளராகவும் மாறியுள்ளார். இதுதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2022 கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. சசெக்ஸ் மற்றும் லெய்செஸ்டர்ஷயர் அணிகளுக்கு இடையிலான கவுண்டி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அவர் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். முதலில் பேட்டிங் செய்த சசெக்ஸ் 142.5 ஓவர்களில் 588/9 ரன்கள் எடுத்தது. புஜாரா தனது 46 ரன்கள் எடுத்தார். டாம் அல்சோப் சிறப்பான 150 ரன்களை விளாசினார். அலி ஓர், ஆலிவர் கார்ட்டர், டெல்ரே ராலின்ஸ் மற்றும் ஜேம்ஸ் கோல்ஸ் ஆகியோரும் அரைசதங்களை விளாசியதால், 588 ரன்கள் குவிக்க முடிந்தது. லீசெஸ்டர்ஷையர் அணியில், கேப்டன் கால்ம் பார்கின்சன் சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய லீசெஸ்டர்ஷைர் அணியும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணியில் லூயிஸ் கிம்பர் 104 ரன்கள் எடுக்க,  கொலின் அக்கர்மேன் 167 விளாசினார். வியான் முல்டர் 129 ரன்கள் விளாச, 143 ஓவர்களில் 529/4 என்ற வலுவான நிலையில் இருக்கிறது. சசெக்ஸ் அணி எடுத்த முயற்சிகளுக்கு விக்கெட்கள் விழாததால், மூத்த வீரரான புஜாரா பந்துவீசத் தொடங்கினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஒருமுறை மட்டுமே பந்துவீசியிருக்கும் புஜாரா, சசெக்ஸ் அணிக்காக லெக் ஸ்பின்னராக பந்துவீசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | ரோகித் சர்மாவிடம் உள்ளது கோலியிடம் இல்லை - பாகிஸ்தான் வீரர் கருத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News