புதுடெல்லி: பிரபலங்களுக்கு சமூகத்தில் மதிப்பும், கவுரமும் கிடைககும் என்றாலும், அதற்கான விலை அவர்களுடைய சொந்த வாழ்க்கையை பாதிக்கிறது. சாதாரணமான ஒருவர் தனது விருப்பப்படி செய்யும் இயல்பான செயல்களும், ஒரு பிரபலத்தால் செய்ய முடிவதில்லை.
கிரிக்கெட் வீரர்கள் உட்பட தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விருப்பத்திற்கு ஏற்ப வாழ விரும்பினால், அது குறித்த செய்திகள் வெளியாகி வைரலாகிறது.
இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சமீபத்தில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார், அதன் பிறகு அவர் பெயர் சமூக ஊடகங்களில் அதிக அளவில் அடிபட்டது.
அதேபோல,பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது மனைவிக்கு விவாகரத்துக்காக மொத்தம் 300 கோடி ஜீவனாம்சம் கொடுத்தார், உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் மைக்கேல் கிளார்க், தனது மனைவியை விவாகரத்து செய்ய 300 கோடி ரூபாய் கொடுக்க ஒப்புக் கொண்டார்.
மேலும் படிக்க | மனைவியை பிரிந்தார் ஷிகர் தவான்; ஆயிஷா முகர்ஜியின் பதிவு வைரல்
திருமணமான 7 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மைக்கேல் கிளார்க் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 7 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு இருவரும் பிரிந்தனர். இவர்களுக்கு கெல்சி லீ என்ற மகளும் உள்ளார். நீதிமன்றத்திற்கு வெளியே இந்த உறவை முறித்துக் கொள்ள இருவரும் முடிவு செய்தனர்.
உதவியாளருடன் தொடர்பு இருந்தது
2018 ஆம் ஆண்டு, மைக்கேல் கிளார்க் தனது உதவியாளருடன் தொடர்பு வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் செய்தி வெளியானது. மைக்கேல் கிளார்க்கின் கிரிக்கெட் அகாடமியின் பணியை சாஷா கையாண்டு வந்தார். இருவரும் ஒருவரோடு ஒருவர் அதிக நேரம் செலவிடுவது வழக்கம்.
புகைப்படங்கள் உலகம் முழுவதும் கசிந்தன
மைக்கேல் கிளார்க் - சாஷா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கசிந்தன, அதில் அவர்கள் ஒரு சொகுசு படகில் படுத்திருந்தனர்.
கிளார்க்கின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து அவரது குடும்பத்தில் வீசிய படகில் இல்லறப் படகு கவிழ்ந்தது. கிளார்க் தனது உதவியாளருடனான உறவு குறித்து அந்த நேரத்தில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
மேலும் படிக்க | குடித்துவிட்டு காரோட்டிய இந்திய கிரிக்கெட் பிரபலம்! டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர்
300 கோடியில் விவாகரத்து
கிளார்க்கின் மனைவியுடனான பேச்சுவார்த்தையில், 40 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 300 கோடி கொடுத்து விவாகரத்து செய்ய கிளார்க் ஒப்புக் கொண்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல் கிளார்க், 'சிறிது காலம் பிரிந்து இருந்த நிலையில் தற்போது இந்த கடினமான முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் ஒருவரையொருவர் மதிக்கிறோம், நாங்கள் இருவரும் பிரிந்து செல்வது நல்லது என்று முடிவு செய்துள்ளோம்.
உலகக் கோப்பையை வென்ற கிளார்க்
கிளார்க் தனது தலைமையின் கீழ் ஆஸ்திரேலியாவை 2015 உலகக் கோப்பைக்கு அழைத்துச் சென்றார். மைக்கேல் கிளார்க் தனது நாட்டுக்காக 115 டெஸ்ட், 245 ஒருநாள் மற்றும் 34 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 8643 ரன்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் சுமார் 8000 ரன்களையும் எடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய கிரிக்கெட்டராக இருக்கிறார் கிளார்க்.
மேலும் படிக்க | தோனி, கோலியால் முடியாததை செய்து காட்டிய ரோஹித் சர்மா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR