Breaking News! Tokyo Olympics: ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 17, 2021, 09:50 AM IST
  • ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
  • டோக்கியோ 2020 தலைமை நிர்வாக அதிகாரி தோஷிரோ முட்டோ உறுதிப்படுத்தினார்
  • தொற்று பாதித்த நபர், எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது வெளியிடப்படவில்லை
Breaking News! Tokyo Olympics: ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி title=

கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாகக் ஒத்தி போடப்பட்டன. இறுதியாக இன்னும் சில தினங்களில் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அவர் விளையாட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று டோக்கியோ 2020 தலைமை நிர்வாக அதிகாரி தோஷிரோ முட்டோ உறுதிப்படுத்தினார்.

தொற்று பாதித்த நபர, எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை வெளியிட அவர் மறுத்துவிட்டார். தனியுரிமைக் கவலைகளை மேற்கோள் காட்டும் அவர் பாதிக்கப்பட்டவர் எந்த நாட்டு குடிமகன் என்பதை தெரிவிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்ஸ் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தற்போது இம்மாதம் 23 தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, மிகவும்கவனமாக ஏற்பாடுகள் தொடங்கின.

Also Read | Tokyo Olympics போட்டிகளில் இருந்து விலகினார் ரோஜர் பெடரர்

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும்.பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆகஸ்ட் 24ம் தேதியன்று தொடங்கி செப்டம்பர் 5 வரை நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய அச்சத்தால் பார்வையாளர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யபப்ட்டுள்ளன. கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் சென்றாலும், வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் அதிகாரிகள் டோக்கியோ விமான நிலையத்திலும் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். 

பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை, விமானநிலையத்திலேயே இருக்கவேண்டும். முடிவுகள் பாதகமாக வந்தால், அவர்கள் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

Also Read | Tokyo ஒலிம்பிக்ஸில் ஹாக்கி இறுதிப்போட்டி நடைபெறாவிட்டால் இரு அணிகளுக்கும் தங்கம்!

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் ஆயிரம் பேர் மட்டுமே கலந்துக் கொள்வார்கள். இந்தியாவில் இருந்து 6 பேர் கொண்ட பாய்மரப் படகு அணி டோக்கியோ சென்றடைந்தது.

டோக்கியோவில் ஊரடங்கு உத்தரவை ஜப்பான் அரசு விதித்துள்ளது. மேலும், போட்டிகளில் ரசிகர்கள் கலந்து கொள்வதற்கும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பல முன்னணி வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். கொரோனா பாதிப்பினால், ஹாக்கிப் போட்டிகளில் இறுதிச் சுற்றில் இரு அணிகளும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டால், இரு அணிகளுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று சர்வதேச ஹாக்கி சம்மேளனம் அறிவித்தது.

இப்படி பலவிதமான வித்தியாசமான மற்றும் பரபரப்பான சூழ்நிலையில் இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன.

Also Read | Tokyo Olympics போட்டிகளில் இருந்து விலகிய டென்னிஸ் நட்சத்திரங்கள்...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News