சிறந்த கேப்டன்களில் தோனி தான் முதலிடம் - ஃபா டூ பிளசி

கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனி மிகவும் சிறந்த கேப்டன் என்று சிஎஸ்கே வின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஃபா டூ பிளசி (faf du plessis) தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 28, 2021, 04:00 PM IST
  • காயங்களிலிருந்து மீண்டு உள்ள ஃபா டூ பிளசி, 2 மாத ஓய்விற்கு பிறகு தற்போது மீண்டும் விளையாட தயாராக உள்ளார்.
  • சிஎஸ்கே எப்போதும் ஒரு பலமான அணியாகவே இருந்துள்ளது. ஒரே அணியில் நான்கு இன்டர்நேஷனல் கேப்டன்களும் விளையாடி உள்ளனர்.
சிறந்த கேப்டன்களில் தோனி தான் முதலிடம் - ஃபா டூ பிளசி  title=

காயங்களிலிருந்து மீண்டு உள்ள ஃபா டூ பிளசி (faf du plessis), 2 மாத ஓய்விற்கு பிறகு தற்போது மீண்டும் விளையாட தயாராக உள்ளார்.  தற்போது ஆரம்பித்துள்ள கரீபியன் பிரீமியர் லீக்கில் லூசியா கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாட உள்ளார் ஃபா டூ பிளசி (faf du plessis).  கரீபியன் பிரீமியர் லீக் செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது, அதனை முடித்துவிட்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார். 

காயத்துக்கு முன் நல்ல பார்மில் இருந்தேன்.  இந்த வருடம் எனக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது, மீதமுள்ள போட்டிகளிலும் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன் என்று சமீபத்தில் பேட்டியில் தெரிவித்துள்ளார்.  சிஎஸ்கே அணியின் வீரர்கள் தேர்வு மிகவும் சிறப்பாக உள்ளது. அதுவே சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.   சிஎஸ்கே எப்போதும் ஒரு பலமான அணியாகவே இருந்துள்ளது.  ஒரே அணியில் நான்கு இன்டர்நேஷனல் கேப்டன்களும் விளையாடி உள்ளனர்.  எம்.எஸ் தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணி வீரர்கள் எப்போதும் தங்களை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.  சிறந்த கேப்டன்களில் எப்போதும் முதல் இடத்தில் இருப்பவர் தோனி தான்.  கடந்த பத்து வருடங்களாக அவர் உடன் விளையாடி வருகிறேன்.  தோனியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன் என்று கூறினார்.

fafandhoni

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ளது. தற்போது சிஎஸ்கே அணி வீரர்கள் அனைவரும் ஐக்கிய அமீரகத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ IPL 2021: ஆர்சிபி அணிக்காக ஆடபோகும் சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQY

Trending News