கேப்டன்ஷிப்ல இவரு எம்.எஸ்.தோனி மாதிரி - சஞ்சய் மஞ்சரேக்கர்

ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷிப் எம்.எஸ்.தோனி போல் இருப்பதாக சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 31, 2022, 02:49 PM IST
  • ஹர்திக் பாண்டியாவுக்கு புகழாரம்
  • தோனி கேப்டன்ஷிப் போல் உள்ளது
  • சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து
கேப்டன்ஷிப்ல இவரு எம்.எஸ்.தோனி மாதிரி - சஞ்சய் மஞ்சரேக்கர் title=

ஐபிஎல் தொடரில் முதன் முதலாக களம் கண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி, சாம்பியன்ஸ் பட்டம் வென்று அசத்தியுள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து உரிய மரியாதை கிடைக்காமல் வெளியேறிய ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக அறிவித்தது. அவரது தலைமையிலான குஜராத் பிளே ஆஃப் சுற்றுக்குகூட தகுதி பெறும் என ஐபிஎல் 2022 தொடங்கும்போது யாரும் நினைக்கவில்லை. படுதோல்வியடையலாம் என்று கூட கருதினர்.

மேலும் படிக்க | விராட்கோலி இடத்தை காலி செய்யப்போகும் 19 வயது இளைஞர்

ஆனால், குஜராத் அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் தொடர் முழுவதும் சூப்பராக இருந்தது. பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த வீரர்கள் அனைவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து அதற்கேற்ப விளையாடினர். ஓபனிங் சொதப்பினால் மிடில் ஆர்டர், மிடில் ஆர்டர் சொதப்பினால் பின்வரிசை வீரர்கள் என ஒவ்வொரு போட்டிக்கும் யாரேனும் ஒருவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக பினிஷர் ரோலில் மில்லர் மற்றும் திவாட்டியா ஆகியோர் வெகு சிறப்பாக பங்களித்தனர். இதனால், அந்த அணி தோல்வி பெறும் போட்டியில் கூட  வெற்றியை தனதாக்கி அசத்தியது. 

 

பவுலிங்கில் பெர்குசன், முகமது ஷமி மற்றும் ரஷித்கான் ஆகியோர் கட்டுக்கோப்பாக வீசினர். பந்துவீச்சைப் போல் பேட்டிங்கிலும் கலக்கி புதிய ஆல்ரவுண்டர் அவதாரம் எடுத்தார் ரஷித்கான். இவையெல்லாம் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்ல மிக முக்கிய காரணமாக அமைந்தது. இது குறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் எம்.எஸ்.தோனியைப் போல் இருப்பதாக பாராட்டியுள்ளார். சூழ்நிலைக்கு தகுந்தவாறு எடுக்கும் முடிவுகள் அவருக்கு மிகவும் கை கொடுத்திருப்பதாகவும், இதேபோன்ற அணுகு முறையை கடைபிடித்தால் பாண்டியா இந்திய அணியின் கேப்டன்ஷிப் ரேஸிலும் இடம்பிடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | Dinesh Karthik: தினேஷ் கார்த்திக்கால் இந்திய அணியில் பறிபோன 2 பேரின் வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News