2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் தகுதி சுற்றில் தோல்வி!

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார், உலக மல்யுத்தம் தகுதி சுற்றில் தோல்வியை தழுவினார்!

Updated: Sep 20, 2019, 03:26 PM IST
2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் தகுதி சுற்றில் தோல்வி!

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார், உலக மல்யுத்தம் தகுதி சுற்றில் தோல்வியை தழுவினார்!

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பிற்கு திரும்பிய சுஷில் குமார், வெள்ளிக்கிழமை கஜகஸ்தானின் நூர் சுல்தானில் நடைப்பெற்ற ஆண்கள் ப்ரீஸ்டைல் ​​74 கிலோ பிரிவு போட்டியின் தொடக்க ஆட்டத்தில் அஜர்பைஜானின் காட்ஜிமுராட் காட்ஜியேவிடம் தோல்வியை தழுவினார்.

துவக்கத்தில் சுஷில் குமார் 8-2 என்ற புள்ளிகணக்கில் முன்னிலை பெற்றிருந்த போதிலும், அஜர்பைஜான் எதிர்ப்பாளர் மீண்டும் குதித்து இந்திய கிராப்லரின் முன்னிலை புள்ளி 9-6 னை குறைப்பதற்கு கடுமையாக முயற்சித்தார். அஜர்பைஜானி தனது நரம்பைப் பிடிப்பதற்கு முன்பு காட்ஷியேஸ் 10-8 என்ற முன்னிலை பெற சுஷிலை பாயிலிருந்து தள்ளி, போனஸ் புள்ளியைப் பிடித்து 11-9 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஒருவேளை 74 கிலோ பிரிவின் ஃபைனலுக்கு கட்ஜியே முன்னேறும் பட்சத்தில் ரெபிசேஜ் முறையில், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற, சுஷில் குமாருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஆண்களின் ப்ரீஸ்டைல் ​​92 கிலோ பிரிவில் கொரியாவின் சூ சாங்ஜேவை 12-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்தியாவிட் பிரவீன் ராணா போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு நுழைந்தார்.

தொழில்நுட்ப மேன்மையின் அடிப்படையில் ராணா வெற்றியாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், தனது கொரிய எதிராளியை ஒரு புள்ளியைப் பிடிக்க அனுமதித்ததால், போட்டி முழுவதும் இந்திய மல்யுத்த வீரர் ஆதிக்கம் செலுத்தினார்.

முன்னதாக 2010-ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடைப்பெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற சுஷில், உலக மல்யுத்த சாம்பியன்சிப்பில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையினை பெற்றார்.