டெஸ்ட் கிரிக்கெட்டில் ‘Bazball’ யுக்தி; இங்கிலாந்து அணியின் புது வியூகம் எடுபடுமா?

கிரிக்கெட்டில் பல யுக்திகள் பற்றி கேள்விப்பட்டிருக்கும் சூழலில் இங்கிலாந்து கிரிக்கெட்டில் ‘Bazball’ என்ற வியூகம் அடிபடத் தொடங்கியிருக்கிறது. அப்படி என்றால் என்ன? என்பது தான் பலரின் கேள்வி.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 21, 2022, 07:00 PM IST
  • இங்கிலாந்து அணியின் புதிய யுக்தி
  • வலைவீசி தேடப்படும் பேஸ்பாக் டெக்னிக்
  • புதிய யுக்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுபடுமா?
டெஸ்ட் கிரிக்கெட்டில் ‘Bazball’ யுக்தி; இங்கிலாந்து அணியின் புது வியூகம் எடுபடுமா? title=

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஷஸ் டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்த பிறகு தீவிர சுய பரிசோதனைக்கு சென்றது. உடனடியாக கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலகினார். பயிற்சியாளரும் விலக புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் இங்கிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்க, நியூசிலாந்து அணியின்  முன்னாள் கேப்டன் பிரென்டன் மெக்கலம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

புதிய பரிணாமத்தில் இங்கிலாந்து அணி

இவர்களின் வருகைக்குப் பிறகு இங்கிலாந்து அணி புதிய பரிணாமத்தை பெற்றது. குறிப்பாக, இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி 378 ரன்களை சேஸிங் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றிக் பிறகு இங்கிலாந்து அணி பத்திரிக்கைகள், அந்நாட்டு அணியை வெகுவாக புகழ்ந்தனர். பேஸ்பால் டெக்னிக்கை மெக்கலம் மற்றும் ஸ்டோக்ஸ் இணை புதியதாக பயன்படுத்துவதாகவும், அவர்களுக்கு இந்த யுக்தி கை கொடுப்பதாகவும் தெரிவித்தன.

மேலும் படிக்க | ஷாகீன் அப்ரிடி விலகலால் இந்தியா நிம்மதி; வக்கார் யூனிஸ் கிண்டல் - ரசிகர்கள் பதிலடி

பேஸ்பால் யுக்தி என்றால் என்ன?

பேஸ் பால் யுக்தி என்பது பொதுவாக தங்களின் பேச்சுரிமைக்காக வெற்றி பெறுவதை மட்டுமே குறிகோளாகக் கொண்டு, அசுர பலத்துடன் எத்தகைய முயற்சியையும் தயங்காமல் எடுப்பது என கூறப்படுவதுண்டு. அதை இங்கிலாந்து அணி தங்களின் விளையாட்டு யுக்தியாக கையில் எடுத்திருப்பதாக இங்கிலாந்து பத்திரிக்கைக்கள் கூறின. அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு எத்தகைய முயற்சியையும் தயங்காமல் எடுப்பது, அதிரடியாக விளையாடி வெற்றியை மட்டுமே பெற வேண்டும், அதில் எந்த மறு சிந்தனையும் இருக்கக்கூடாது என்ற ஒருவகையான அதிரடி யுக்தியாகும். இந்த யுக்தியை டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி பயன்படுத்துவதை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலமும், கேப்டன் பென் ஸ்டோக்ஸூம் கூட ஒப்புக்கொண்டுவிட்டனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி

மெக்கலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடிக்கு பெயர்போனவர் என்பதால், அவர் இந்த யுக்தியை பயிற்சியாளராக பொறுப்பேற்றவுடன் ஸ்டோக்ஸூடன் சேர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட்டின் அணுகுமுறையில் புகுத்தியுள்ளார். இந்த அணுகுமுறை ஒரு சில போட்டிகளுக்கு நல்ல முடிவை கொடுத்தாலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்னிங்ஸ் தோல்விக்கு வித்திட்டுள்ளது. மிகப்பெரிய தோல்விக்கு காரணமாக பேஸ்பால் அணுகுமுறை இருப்பதால் கடும் விமர்சனத்தையும் சந்தித்துள்ளது.

இங்கிலாந்து அணி மாற்றிக் கொள்ளுமா?

ஆனால், தங்களின் இந்த அணுகுமுறையை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அட்டாக்கிங் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களால் வெற்றி பெற முடியும் எனத் தெரிவித்துள்ள அவர், அடுத்தடுத்த போட்டிகளிலும் இதே அணுகுமுறையை கையாள்வோம் எனக் கூறியிருக்கிறார். ஆனால், அவரின் இந்த பேட்டிக்கு பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து அணிக்கு பேஸ்பால் யுக்தி கை கொடுக்காது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலர் அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும் படிக்க | பாக் வீரரின் பெயரை நிராகரித்த வாட்சன்: இந்திய வீரருக்கு புகழ்மாலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News