ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 27 ஆம் தேதி துபாயில் தொடங்குகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தங்களின் முதல் ஆட்டத்தில் 28 ஆம் தேதி மோதுகின்றன. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் ஸ்டார் பந்துவீச்சாளரான ஷாகீன் அப்ரிடி காயம் காரணமாக ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்புயல் வக்கார் யூனிஸ், ஷாகீன் அப்ரிடி விலகலால் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிம்மதி அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், காயத்தில் இருந்து விரைவில் குணமடைந்து கிரிக்கெட்டுக்கு அவர் திரும்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஆசியக்கோப்பை 2022; இந்தியா - பாகிஸ்தான் இதுவரை சந்திக்காத ஒரு மேட்ச்
வக்கார் யூனிஸின் இந்தக் கருத்து இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சிறுமைப் படுத்துவது போன்று இருப்பதால், இந்திய ரசிகர்களிடையே கோபம் ஏற்பட்டுள்ளது. அவர் ஒருவரை பார்த்து இந்திய வீரர்கள் பயப்படுவதாக வக்கார் யூனிஸ் தெரிவித்த கருத்துக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். தங்களுடைய பதிலடியில், செஞ்சூரியனில் அவரின் பந்துவீச்சை இந்திய வீரர்கள் துவம்சம் செய்ததை மறந்துவிட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர். இந்திய அணி யாரையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கும் ரசிகர்கள், இந்திய அணியைப் பார்த்து பாகிஸ்தான் அணி பீதியில் இருப்பதை உணர முடிவதாகவும் பதிலடி கொடுத்துள்ளனர்.
Shaheen’s injury Big relief for the Indian top order batsmen. Sad we won’t be seeing him in #AsiaCup2022 Get fit soon Champ @iShaheenAfridi pic.twitter.com/Fosph7yVHs
— Waqar Younis (@waqyounis99) August 20, 2022
காயமடைந்திருக்கும் ஷாகீன் அப்ரிடி 6 வாரங்கள் வரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்குள் அணிக்கு திரும்பிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி இருப்பதையும் கவனத்தையும் கொண்டு, சிகிச்சை எடுத்து வருகிறார் ஷாகீன் அப்ரிடி. பாகிஸ்தான் அணியில் இருந்து அவர் விலகியிருக்கிறார் என்றால், இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியிருக்கிறார். அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இரு அணிகளிலும் முக்கிய பந்துவீச்சாளர்கள் விலகியிருக்கும் நிலையில், ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. கடைசியாக 20 ஓவர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் சந்தித்துக் கொண்டன. அதில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க | ஜிம்பாப்வே பவுலர் குடும்பத்துக்கு சர்பிரைஸ் கொடுத்த இந்திய பவுலர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ