இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றிப் பெற ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தவேண்டியுள்ளது!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிகமில் கடந்த ஆகஸ்ட்., 18-ஆம் நாள் துவங்கியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 161 மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா கோலியின் 103(197) அதிரடி சதத்தாலும், புஜாரா 72(208), பாண்டியா 52(52) அரைசதத்தாலும் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை குவித்தது. இதனையடுத்து ஆட்டத்தின் 110-வது ஓவரில் இந்தியா தனது ஆட்டத்தினை டிக்ளர் செய்துகொள்வதாக அறிவித்தது.
இதனையடுத்து 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகின்றது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்புகள் ஏதும் இன்றி 9 ஓவர்கள் முடிவில் 23 ரன்கள் குவித்தது. பின்னர் நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாய் அமைந்தது. நாளின் துவக்க ஓவரிலேயே முதல் இரண்டு விக்கெட்டினை இழந்தது.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற ஜோஸ் பட்லர் மட்டும் 106(176) நிதானமாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினார். எனினும் புமராவின் பந்தில் அவர் வெளியேற பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து வெளியேறினர்.
England survive to see day five!
But they only have one wicket left.
A dogged resistance from Buttler, Stokes and the tailenders gets England to 311/9, 209 runs behind India.#ENGvIND scorecard ⬇️https://t.co/3x88SzxNtJ pic.twitter.com/u1FuwVXhx0
— ICC (@ICC) August 21, 2018
இதனால் இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 102 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. மீதம் ஒரு விக்கெட் மட்டுமே கையில் இருக்கும் நிலையில் இங்கிலாந்து வெற்றி பெற 210 ரன்கள் குவிக்க வேண்டியுள்ளது.
அடில் ரஷீத் 30(55) மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 8(16) ரன்களுடன் தற்போது களத்தில் உள்ளனர். இவர்களில் ஒருவரது விக்கெட்டினை வீழ்த்தினால் இந்தியா வெற்றியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.