வரலாற்றில் முக்கியமான நாள்! ENG vs IRE: முதல் ஒருநாள் போட்டி ஆன்லைனில் எப்போது பார்ப்பது?

இன்று (ஜூலை 30) ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான நாளாக மாற உள்ளது. இந்தியா நேரப்படி மாலை 6.30 மணிக்கு இங்கிலாந்து - அயர்லாந்து (England vs Ireland) மோதும் முதல் ஒரு நாள் போட்டித் தொடங்க உள்ளது.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Jul 30, 2020, 05:57 PM IST
வரலாற்றில் முக்கியமான நாள்! ENG vs IRE: முதல் ஒருநாள் போட்டி ஆன்லைனில் எப்போது பார்ப்பது?
Photo: Twitter/Ireland Cricket

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்தும் அயர்லாந்தும் இடையே நடைபெற உள்ள ஒருநாள் போட்டி ஒரு வரலாற்றை உருவாக்கும், ஏனெனில் அவை மார்ச் மாதத்திற்கு பிறகு விளையாடப்படும் முதல் ஒருநாள் சர்வதேச போட்டியாகும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (England Cricket Board) மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகரமாக நடத்தியது, இப்போது மூன்று ஒருநாள் போட்டிகளில் அயர்லாந்தை நடத்த உள்ளது.

அதாவது இன்று (ஜூலை 30) ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான நாளாக மாற உள்ளது. இந்தியா நேரப்படி மாலை 6.30 மணிக்கு இங்கிலாந்து - அயர்லாந்து (England vs Ireland) மோதும் முதல் ஒரு நாள் போட்டித் தொடங்க உள்ளது. அதேபோல மூன்று போட்டிகள் கொண்ட, இந்த தொடர்களுடன் ஐசிசி உலகக் கோப்பைக்கான சூப்பர் லீக் தொடர் தொடங்க உள்ளது. 

ALSO READ | கொரோனா அச்சத்திற்கு மத்தியில் 10 மாற்றங்களுடன், முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி

இங்கிலாந்து - அயர்லாந்து மோதும் தொடர் ஒரு சூப்பர் லீக் தொடர் ஆகும். இந்த தொடரில் அயர்லாந்து வெற்றி பெற்றால்,நேரடியாக 2023 உலகக் கோப்பைக்கான தகுதியை பெறும்.

அயர்லாந்தைப் பொறுத்தவரை, 2023 உலகக் கோப்பைக்கான அவர்களின் பயணம் இன்று தொடங்குகிறது. வரவிருக்கும் உலககோப்பை தொடரில் 10 அணிகள் கொண்ட நிகழ்வாக இருக்கும். எனவே அயர்லாந்து அணிக்கு இந்த தொடர் முக்கியமானது.

இந்த தொடரின் மூன்று ஒருநாள் போட்டிகளும் சவுத்தாம்ப்டனின் தி ரோஸ் பவுல் (The Rose Bowl, Southampton) மைதானத்தில் நடைபெறும். இந்த தொடருக்கு பின்னர், ஒரு சிறிய இடைவெளி பிறகு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தின் அணி, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.

ALSO READ | England vs West Indies: கொரோனா Bio-Secure கட்டுப்பாட்டை மீறிய இங்கிலாந்து வீரர்

இங்கிலாந்து அணி: ஈயோன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், டாம் குர்ரான், லியாம் டாசன், ஜோ டென்லி, சாகிப் மஹ்மூத், ஆதில் ரஷீத், ஜேசன் ராய், ரீஸ் டோப்லி, ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி

அயர்லாந்து அணி: ஆண்ட்ரூ பால்பிர்னி (இ), பால் ஸ்டிர்லிங், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜோஷ் லிட்டில், ஆண்ட்ரூ மெக்பிரைன், பாரி மெக்கார்த்தி, கெவின் ஓ பிரையன், வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட், பாய்ட் ராங்கின், சிமி சிங், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கிரேக் யங்.

ALSO READ | கொரோனா காரணமாக ICC டி-20 உலக கோப்பை ஒத்திவைப்பு.. IPL 2020 தொடர் உறுதி