ஃபிபா உலக்கோப்பை அரையிறுதி: சாதனைக்கு ரெடி ஆகும் 4 அணிகள் -ஒரு பார்வை

நாளை முதல் உலக்கோப்பை கால்பந்து போட்டியின் அறையிறுதி ஆட்டம் ஆரம்பம்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Jul 9, 2018, 05:16 PM IST
ஃபிபா உலக்கோப்பை அரையிறுதி: சாதனைக்கு ரெடி ஆகும் 4 அணிகள் -ஒரு பார்வை
Pic Courtesy : @FIFAWorldCup

21-வது FIFA உலக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகிறது. 

32 நாடுகள் பங்குபெற்ற உலக்கோப்பை கால்பந்து தொடரில் லீக் ஆட்டங்கள், நாக் அவுட் ஆட்டங்கள் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்து, நாளை முதல் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

21-வது FIFA உலக்கோப்பை கால்பந்து தொடரில் 8 பிரிவுகள் என, ஒவ்வொரு பிரிவுக்கும் நான்கு நாடுகள் என்று மொத்தம் 32 நாடுகள் பங்குபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. நாக் அவுட் சுற்றில் 16 அணிகள் மோதின. அதில் வெற்றி பெற்ற 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. காலிறுதியில் வெற்றி பெற்ற நான்கு அணிகள் அரையிறுதியில் மோதுள்ளன.

லீக் மற்றும் நாக் அவுட் மற்றும் காலிறுதி ஆட்டங்களில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றன. ஆம், கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்ட இத்தாலி, ஜெர்மனி, போர்ச்சுகல், ஸ்பெயின், அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே அணிகள் வெளியேறின. அதேபோல 21-வது FIFA உலக்கோப்பை போட்டிகளை நடத்தி வரும் ரஷ்யா அணியும் காலிறுதியில் வெளியேறியது.

நாளை நடக்க உள்ள அரையிறுதி போட்டிக்கு பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம், குரேஷியா நாடுகள் பங்கேற்கின்றனர். 

ஜூலை 10 மற்றும் 11 ஆம் தேதிக்களில் இரண்டு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் அறையிறுதியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் மோதுகின்றனர். இதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெரும். அதேபோல இரண்டாம் அறையிறுதியில் இங்கிலாந்து மற்றும் குரேஷியா அணிகள் மோதுகின்றனர். இதில் வெற்றி பெரும் அணி, ஏற்கனவே முதல் அறையிறுதியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணியுடன் மோதும். 

அறையிறுதியில் மோதும் நான்கு அணிகளில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் மட்டும் உலக்கோப்பையை வென்றுள்ளது. பெல்ஜியம், குரேஷியா அணிகள் வெற்றி பெற்றால் முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணி என்ற பெருமையை பெரும்.