FIFA 2018: 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை முறியடித்த உருகுவே!

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ரஷ்யா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் உருகுவே வீழ்த்தியது!    

Last Updated : Jun 26, 2018, 08:14 AM IST
FIFA 2018: 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை முறியடித்த உருகுவே! title=

ரஷ்யாவில் நடைபெற்ற 21-வது உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ரஷ்யா மற்றும் உருகுவே மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யா அணியை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய உருகுவே 2-0 என முன்னிலையில் இருந்தது. இதேபோல் 2-வது பாதியிலும் உருகுவே ஆதிக்கம் தொடர்ந்ததால், இந்த கோல்களை சமன்படுத்த ரஷ்ய வீரர்கள் முயற்சித்தும் உருகுவே அதற்கு இடம் கொடுக்கவில்லை. 

இரண்டாம் பாதி ஆட்டத்தில் அந்த அணியில் சார்பில் விளையாடிய எடின்சன் பலத்தால் இன்னொரு கோல் அடித்ததால் உருகுவே அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் குரூப் ஏ பிரிவில் 9 புள்ளிகளை பெற்று உருகுவே அணி முதல் இடத்தில் உள்ளது, ரஷ்யா 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

Trending News